Connect with us

Uncategorized

“ஆப்பரேஷன் நக்ஸலைட்ஸ்” அமித்ஷாவின் அடுத்த அதிரடி

இந்தியா முழுக்க நக்ஸலைட்டுகள் இருந்து வந்தாலும், குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பீகார், தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக இருந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களை எதிர்த்து அந்தந்த மாநிலங்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், ஒவ்வொரு மாநில அரசுகளும் நக்ஸலைட்டுகளுக்கு எதிராக எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநில நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நக்ஸலைட்டுகள் வாழும் பகுதிகளில் மக்கள் நல திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுகிறது என்றும் ஆலோசித்து வருகின்றனர்….

இந்த 10 மாநிலங்களில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளையும் அமித்ஷா சந்தித்து பேசுகிறார். இதனால் நக்ஸலைட்டுகளை ஒழிக்க புதிய திட்டம் வகுத்து வருவதாக பேசப்படுகிறது. இன்னும் 2 ஆண்டுக்குள் இந்தியாவில் ஒரு நக்ஸலைட்டுகள் கூட இருக்க கூடாது என்றும் மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது. எற்கனவே மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், நக்ஸலைட்டுகளுக்காக போடப்பட்ட இந்த ஆப்பரேஷன் அதிரடியாக நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...
Loading...

Trending