ஒரே வார்த்தையில் அதிரடி காட்டிய பாஜக தலைவர் முருகன் அதிர்ச்சியில் திருமாவளவன் !

கடந்த ஆறு மாத காலத்தில் தமிழக பாஜக தலைவர் யார் அறிவிக்கப்படுவார் என்று பல யூகங்கள் வெளியாகியது. ஆனால், எல்லா யூகங்களையும் புறம் தள்ளிவிட்டு பாஜக தேசியத் தலைமை, தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகனை தமிழக பாஜக தலைவராக அறிவித்தது .

Loading...

இதன் மூலம் தமிழக பாஜகவின் தலைவராகும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 2வது தலைவர் என்று பாஜக வரலாற்றில் பதிவாகினார் முருகன்,
பாஜகவில் மாநில தலைவர் பதவி என்பது மாநிலத்தில் கட்சியில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர். அதனால், பாஜகவில் முக்கியமான பதவி. இப்படி முக்கியமான பதவிக்கு தலித் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து பாஜக வட்டாரத்தினர் கூறுகையில், “பொதுவாக தமிழக அரசியலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகளில் இத்தனை ஆண்டு கால வரலாற்றில் கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள பதவிகளை தலித்களுக்கு வழங்கியதில்லை.

காங்கிரஸ் கட்சியில்கூட எல்.இளையபெருமாள் தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
திமுகவில் ஆ.ராசா போன்றவர்களை மத்திய அமைச்சராக்கியுள்ளார்கள் என்றாலும் கட்சியில் அதிகாரமுள்ள முக்கிய பதவிகளை வழங்கியதில்லை. அதே போல, கல்வி வேலைவாய்ப்புகளில் 18 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுள்ள தலித் மக்கள் சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி 2 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.

Loading...

அதிமுக தனபாலுக்கு சபாநாயர் பதவி அளித்து இருந்தாலும் கட்சி பொறுப்புகளில் தலித்துகளுக்கு மிக முக்கிய பொறுப்பு இன்னும் அளிக்கப்படவில்லை.
தமிழக மக்கள் தொகையில் 20%-க்கு மேல் உள்ள தலித்  சமூகத்தில் இருந்து ஒருவருக்கு தமிழக அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் அதிகாரம் மிக்க பதவி இதுவரை அளிக்கப்படவில்லை. இதனை உணர்ந்துகொண்ட பாஜக தேசியத் தலைமை தலித் மக்களை பாஜகவை நோக்கி ஈர்க்க தலித் ஒருவரை தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்து அறிவித்தது என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டது,

தலித் ஒருவர் மாநில தலைவராக நியமனம் செய்வது பாஜகவில் ஒன்றும் புதுது இல்லை. ஏற்கெனவே டாக்டர் கிருபாநிதி தமிழக பாஜக தலைவராக இருந்துள்ளார். இப்போது 2வது முறையாக தலித் ஒருவர் பாஜக தலைவாராகியிருக்கிறார்.  திமுக, அதிமுக, காங்கிரஸ் என பல கட்சிகளுக்கும் முன்னுதாரணமாக பாஜக எல்.முருகனை தலைவராக அறிவித்தது எல்.முருகன் தலைமையில் தமிழக பாஜக புதிய பலம் பெற்று உயரும் என்று பாஜக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.,

தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.முருகன், ஆண்டுகளாக எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தவர் . இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எல். படித்தவர். அதுமட்டுமல்லாமல், அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் சட்ட ஆய்வுகள் துறையில் மனித உரிமைகள் தொடர்பாக பி.எச்டி முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறார்.

இதுவரை நடந்தது பலருக்கும் தெரிந்திருக்கலாம் ஆனால் தற்போது பாஜக மாநில தலைவர் முருகனின் சமீபத்திய செயல்பாடுகள் திருமாவளவனை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, முருகன் தனது முதல் கூட்டத்தில் கோவையில் பாஜகவினர் இடையே பேசினார் அப்போது, மதமாற்றத்தில் சிக்கிய பழங்குடியினர் மற்றும் பட்டியல் இன மக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.

அதாவது திருமாவளவன் போன்றோர் இந்து மதத்தில் தங்களை புறம் தள்ளுவதால் தான் தலித்துகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறுவதாக கூறிய நிலையில் அதே சமூகத்தை சேர்ந்த இந்து மதத்தில் தீவிர நம்பிக்கை உடைய முருகனை தலைவராக நியமித்து திருமாவளவனின் செயல்பாட்டிற்கு ஆப்பு அடித்தது பாஜக,

இந்நிலையில் பட்டியல் இனத்தை சேர்ந்த கோவை சுற்றுப்பகுதியை சேர்ந்த 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி 3 மாதத்திற்குள் நடைபெற இருக்கிறதாம், அதிலும் பெரும்பான்மையானோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய இடுகிறார்களாம்.

மேலும் தேனி மாவட்டம் பொம்மிநாயகன் பட்டியில் முருகன் சென்று அவர்களை பாஜகவில் இணைக்க இருக்கிறாராம் இது போன்ற செயல்பாடுகள் காரணமாக தலித்துகளை வைத்து அரசியல் செய்த இயக்கங்கள் குறிப்பாக விசிக கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளதாம், பாஜகவின் ஆட்டம் இனிதான் ஆரம்பமோ?

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*