Connect with us

சர்ச்சைகள்

ஒன்றா இரண்டா பல பெண்கள் 2020 ல் சீமான் பற்றிய உண்மைகளை வெளியிட்ட விஜயலட்சுமி இதற்காகத்தான் எடப்பாடியை சந்தித்தாரா?

சமூகவலைத்தளம் : நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ இணையத்தில் பலத்த எதிர்வினையை சீமானுக்கு உண்டாகியுள்ளது மேலும் சீமான் மதம் குறித்தும் தன்னுடன் பழகிய காலத்தில் என்னவெல்லாம் கொடுமை படுத்தினர் என்ற வீடியோவை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் சீமான் தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக சீமான் குறித்து விஜயலட்சுமி அவருடன் தாயுடன் சென்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து புகார் அளித்தார், அப்போது தலைமறைவான சீமான் அதன் பிறகு திடீர் என இலை மலர்ந்தால் ஈழம் வளரும் என்று அதிமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்டார்.

அதன்பிறகு அவரது வாழ்க்கை பல்வேறு நிலையை கடந்து தற்போது முருகன் சிவன் ஆகியோர் தமிழ் கடவுள் எனவும் தற்போது அதற்காக போராடப்போவதாகவும் வந்து நிற்கிறது, இந்நிலையில் விஜய லட்சுமியுடன் பழகிய காலத்தில் விஜயலட்சுமி சிவனை கும்பிட்டால் கிண்டல் செய்வதாகவும், பட்டை அடிப்பதை கேலி செய்ததுடன் பல்வேறு தொந்தரவுகளை சீமான் கொடுத்ததாக அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

சீமான் உண்மையான பெயர் சைமன் என்றும் அவர் கிறிஸ்துவர் என்றும் குறிப்பிட்ட விஜயலட்சுமி தற்போது சீமான் நெற்றியில் பட்டை போட்டு யாரை ஏமாற்ற போனாய் என வெளுத்து எடுத்துள்ளார், அத்துடன் இந்து கடவுள்களை விமர்சனம் செய்துவிட்டு வரும் சீமானை அங்குள்ளவர்கள் விரட்டி அடிக்காமல் பார்ப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

Loading...

ஒன்றல்ல பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சீமான் சிவனை வைத்தே நாடகத்தை தொடங்கி இருப்பதால் விரைவில் அழிவார் எனவும், மதுரை மீனாட்சி கோவிலுக்கு போய்விட்டு வந்ததற்காக தன்னை கொடுமை படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார், சீமான் ஒரு பெரிய பிராடு எனவும் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது எனவும், அப்போது பெரியாரிஸ்ட் என்று சொல்லிக்கொண்டிருந்த சீமான் சிவனை திட்டிய சீமான் இப்போது வருவதற்கு என்ன காரணம் எனவும் யாரை ஏமாற்ற எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது விஜயலட்சுமி சீமானின் எதிர்ப்பை சமாளிக்க முன்வந்தது மட்டுமல்லாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சீமான் மீதான தான் கொடுத்த வழக்கை எதிர்கொள்ள தயாராகிவிட்டார் எனவும் கூறப்படுகிறது, அதே நேரத்தில் நிச்சயம் விஜய லட்சுமி அழுத்தம் கொடுத்தால் முக்கிய மூன்று பிரிவுகளில் சீமானை கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதாலும், தனது கட்சியினருக்கு உண்மை தெரிந்தால் மேலும் தான் கிறிஸ்துவர் என தெரிந்தால் அரசியல் வாழ்க்கையே கேள்வி குறி ஆகும் என்பதால் எடப்பாடியை சந்தித்து ஆதரவு கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் ஓபிஎஸ் ஸை தொடர்புகொண்டு ஆதரவு கேட்ட சீமானை ஓபிஎஸ் விரட்டி விட்டதாகவும் பின்பு தனக்கு நெருக்கமான முன்னாள் மந்திரி மூலம் சீமான் எடப்பாடியை சந்தித்து விஜய லட்சுமி விகாரத்தை பெரிது படுத்தவேண்டாம் எனவும் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

Loading...

Trending