சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை… மன அழுத்தத்தில் கொரோனா நோயாளி செய்த செயலால் பரபரப்பு!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை… மன அழுத்தத்தில் கொரோனா நோயாளி செய்த செயலால் பரபரப்பு!

Loading...

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிலும் தலைநகர் சென்னையில் தினசரி 500 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழக எண்ணிக்கை 19,000 ஐ தாண்டிவிட்டது. மேலும் சென்னையில் மட்டும் எண்ணிக்கை 13,000 ஐ தாண்டிவிட்டது. அதிகளவில் தொற்று உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், குணமாகி வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பது ஒரு ஆறுதலாக உள்ளது.

Loading...

சென்னை கொரோனா தொற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுகின்றனர். அதில் சிலர் மன அழுத்தத்தால் அங்கிருந்து தப்பித்து செல்லுதல் மற்றும் தற்கொலை செய்து கொள்ளுதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று மருத்துவமனையில் இருந்து அவர் தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்த, அவரைக் கண்டுபிடிக்கும் பணியை காவலர்களும் சுகாதாரப் பணியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

இது போல நோயாளிகள் தப்பிச் செல்வது இதுபோல சில முறை நடந்துள்ளதால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது போல மனோ நல சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும் என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. சில தினங்களுக்கு முன்னர் அதே மருத்துவமனை வளாகத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*