Connect with us

#24 Exclusive

1 லட்சம் ரூபாய் சொத்து இருக்கிறதா இனி உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் !

சேலம் :- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து முக்கிய அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் சொத்து மதிப்பு 50 ஆயிரத்திற்கு குறைவாக உள்ள முதியவர்களுக்கு, முதியோர் ஓய்வூதியம் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது, மேலும் முதியோர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்ததில் 25% மனுக்கள் ஆண்டு வருமானம் 50 ஆயிரத்திற்கு மேல் இருப்பதாக காரணம்காட்டி நிராகரிக்கப்பட்டன, இதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி முக்கிய அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அவர் கூறிய தகவல்கள் பின்வருமாறு :- சொத்து மதிப்பு ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் இருந்ததால் 25%  மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்கள். ரூபாய் 50 ஆயிரம் என்பது முந்தைய காலத்தில் இருக்கலாம், இன்றைய சூழ்நிலையை அதனை மாற்றியமைக்க வேண்டுமென்று அறிவுறுத்தினேன்.

Loading...

அதனடிப்படையில் முதியோர் உதவித் தொகை பெறுபவர்களின் சொத்து மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் என்று இருந்த நிலையை மாற்றி ரூபாய் 1 இலட்சம் வரை இருக்கலாம் என நான் ஆணையிட்டிருக்கின்றேன். அதனை நம்முடைய அதிகாரிகள் உடனடியாக நடைமுறைப்படுத்துவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Loading...

எனவே சம்பந்தப்பட்ட முதியோர்கள் உடனடியாக இதுகுறித்த அதிகாரியிடம் விண்ணப்பித்தால் முதியோர் உதவித்தொகை கிடைக்கும் மறக்காமல் உடனடியாக விண்ணப்பித்து விடுங்கள்.

©TNNEWS24

Loading...

Trending