மூன்று ஆண்டுகளில் ஒரு இந்து மிச்சம் இருக்க கூடாது அதிர்ச்சியை ஏற்படுத்திய மோகன் சி லாசரஸ் வீடியோ பின்னணியில் அரசியல் கட்சி

தமிழகத்தில் உள்ள அனைவரையும் மூன்று ஆண்டுகளில் மதம் மாற்றி விடுவோம் என இலக்கு நிர்ணயித்து கிறிஸ்துவ மதம் போதகர் மோகன் சி லாசரஸ் பேசியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Loading...

மதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் 38 ஆயிரம் சபைகள் இப்போது அவரிடம் உள்ளதாகவும், அதில் 60 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாகவும், இன்றில் இருந்து ஒருவர் என அனைவரும் மதமாற்றத்தில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகளில் மொத்த தமிழ் நாட்டையே மாற்றி விடலாம் என எந்தவித பயமும் இன்றி பொது வெளியில் மதமாற்றம் குறித்து பேசியிருக்கிறார்.

குறிவைத்து மதமாற்றத்தில் ஈடுபட கூடாது என சட்டம் இருந்தும் எவ்வாறு லாசரஸ் இவ்வாறு பேசுகிறார் என்று நெருக்கமானவர்களிடம் விசாரித்ததில் இன்னும் மிக பெரிய அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன, நாடார் சமூகத்தை சேர்ந்த லாசரஸ் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பான்மையான மக்களை மதம் மாற்றி விட்டார், சொந்த சமூகத்தை தவிர பிள்ளைமார், யாதவர், உடையார், தலித்துகள் ஆகிய சமூகத்தை குறிவைத்து தான் களத்தில் இறங்கியுள்ளார்.

Loading...

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற பயமில்லையா என்று கேட்டதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்த்து இவ்வாறு பேசி வருகிறார், தமிழகத்தில் மக்கள் யோசிக்க மாட்டார்கள் மாறாக அனுதாபம் தான் படுவார்கள் சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தியதற்கு மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி அவரை மிக பெரிய அளவில் பிரபலம் அடைய செய்தார்கள் அவருக்கு சில அரசியல் கட்சிகளும் துணை நிற்கின்றன.

அதே போல் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், ஊழியம் செய்ததால் மத்திய அரசு பழிவாங்குகிறது என்று அவர் கூறினால் முக்கிய எதிர்க்கட்சியில் தொடங்கி அனைவரும் அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிப்பார்கள், ஒரு வாரமோ இரண்டு வாரமோ மிஞ்சி போனால் ஒரு மாதத்தில் வெளிவந்து இதை விட அதிக அளவில் வளர்ந்து விடுவார்.

2021 தேர்தலை கணக்கிட்டுதான் எல்லாம் நடக்கிறது, என்று குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார், தமிழகத்தில் பொதுவெளியில் மதம் மாற்றம் குறித்து பேசிய நபரை கண்டிக்க யாரும் இல்லை ஆனால் இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக பாஜக மீது பழியை போடுகிறார்கள், இதே போல் பாஜக அல்லது இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் கிறிஸ்துவர்கள் அனைவரையும் மூன்று ஆண்டுகளில் மதம் மாற்றுவோம் என்று பேசியிருந்தால் இப்படித்தான் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அமைதியாக இருப்பார்களா?

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2668 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*