Connect with us

#24 Exclusive

அன்று சொன்னோம் நடந்துவிட்டது, ரவீந்திரநாத் குமார் டெல்லி பயணம் !! 7 டிக்கெட் புக் செய்யபட்டுள்ளது!!

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் பல மாதங்களாக செய்திகள் வெளியான சூழலில் தற்போது கைகூடி வந்துள்ளது, அவருக்கு கலாச்சார துறை மந்திரி பதவி கிடைக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

தமிழக அரசியல் களம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது, திமுக தனக்கென IPAC என்ற அமைப்பினை தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்து அதன் பணியை தொடங்கிவிட்டது, ரஜினி கட்சி தொடங்குவார் என்ற நினைப்பில் அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் அதிமுகவுடன் நெருக்கம் காட்ட தயங்குகின்றன.

இந்த சூழலில்தான் அதிமுக முதன்மை ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் செல்வம் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்க முடிவெடுத்து அது ஏறத்தாழ 90% நிறைவேறிய நிலையில் எடப்பாடி தரப்பை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கத்திற்கும் அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும் இல்லை என்றால் கட்சியில் பிளவு ஏற்படும் எனவும் கூறினர்.

Loading...

அதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு கொடுக்கப்படும் நேரத்தில் ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் பதவி கிடைப்பது தடைப்பட்டது, இந்நிலையில் பிரதமர் மோடியின் நன் மதிப்பினை ரவீந்திரநாத் பெற்றுள்ளார் என்றுகூறப்படுகிறது, மேலும் தற்போதைய ஆட்சி நீடிப்பதற்கு முக்கிய காரணம் மத்திய அரசுதான் இது எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாக தெரியும், மேலும் முன்னாள் கேரள ஆளுநர் சதாசிவம் மூலம்தான் மத்திய அரசை எடப்பாடி அணுகினார் அப்போது அண்ணன் பன்னீர் செல்வம் அதிமுகவின் தலைவராக வரட்டும் என எடப்பாடி தரப்பு உறுதி அளித்தது.

Loading...

ஆனால் அதன் பிறகு ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி அதில் சரிசமமான அதிகாரத்தை எடப்பாடி பெற்றுக்கொண்டார், இந்த நிலையில்தான் மாநிலத்தில் நடப்பதை பல முறை மோடியிடம் நேரடியாக கூறினார் பன்னீர் செல்வம் அப்போதைய தேர்தல் நெருங்கிவரும் சூழலில் உட்கட்சிக்குள் வரும் மோதலை தற்சமயம் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என மோடி கூறியிருக்கிறார்.

ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் சசிகலா தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது மத்திய அரசிற்கு சென்றுள்ளது அதுமட்டுமல்லாமல் வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவை கழட்டிவிட்டு அதன் மூலம் இஸ்லாமியர்கள் வாக்குகளை பெறலாம் எனவும், அதனை வைத்தே கட்சியை கைப்பற்றி விடலாம் என எடப்பாடி திட்டமிட்டு காய் நகர்த்தியிருப்பதாக மத்திய அரசு சந்தேகிக்கிறது.,

இந்த சூழலில்தான் எடப்பாடிக்கு செக் வைக்க ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பாஜக முன்வந்துள்ளது, ஆட்சி அதிகாரம் இருக்கும்வரை தான் எடப்பாடி பின்னால் அமைச்சர்களும், முக்கிய நபர்களும் இருப்பார்கள் எனவும் அதன் பிறகு அனைத்தும் மாறும் எனவும் ஆறுதல் சொல்லியிருக்கிறது, அதன் படியே இந்த மாதத்திற்குள் ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராக பொறுப்பேற்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வருகிற 21- ம் தேதி டெல்லிக்கு ரவீந்திரநாத் குமார் சார்பில் 7 டிக்கெட் புக் செய்ய பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Loading...

Trending