இந்தியாவின் தங்க மனிதர் பல்பீர் சிங் மரணம் – முறியடிக்க முடியா ஒலிம்பிக் சாதனை!

இந்தியாவின் தங்க மனிதர் பல்பீர் சிங் மரணம் – முறியடிக்க முடியா ஒலிம்பிக் சாதனை!

Loading...

இந்தியாவுக்காக மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

1952 ஒலிம்பிக் போட்டியின் தங்கப் பதக்க ஆட்டத்தில் ஹாலந்துக்கு எதிராக இந்தியா 6-1  என்ற கணக்கில் வென்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட பல்பீர் சிங் தனியாளாக அடித்த கோல்களின் எண்ணிக்கை 5 ஆகும். இந்திய அணிக்காக விளையாடி ஒலிம்பிக்கில் 5 கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் பல்பீர் சிங் ஆவார். மேலும் 1975 ஆம் ஆண்டு இவர் தலைமையிலான இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

Loading...

வயது மூப்புக்காரணமாக இருதய பிரச்சனைகளால் அவதிப்பட்ட பல்பீர் சிங், மொஹாலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்தார். அவருக்குப் படிப்படியாக உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்த நிலையில் சில முறை இருதய முடக்கமும் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 6.17 மணிக்கு பல்பீர் சிங்கின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 95 ஆகும்.

இவரது மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*