தீராத நோய்களுக்கு தீர்வு தரும் நாவல் பழம்!! நன்மைகள் …

தீராத நோய்களுக்கு தீர்வு தரும் நாவல் பழம்!! நன்மைகள் …

Loading...

நாவல் பழம் நிறைய மருத்துவ குணம் நிறைந்தது. இதன் இலைகள்,விதைகள் மற்றும் பழங்கள் என அனைத்துமே மருந்தாக பயன்படுத்தலாம். இவை மிர்தாசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. மற்றும் அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும். இந்த பழத்தில் புளிப்பு, இனிப்பு மற்றும் உவர்ப்பு என மூன்று சுவைகளும் உள்ளது. நாவல் பழம் கடவுளின் பழம் என்று இந்தியாவில் போற்றப்படுகிறது. இந்தியாவில் இது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கிடைக்கிறது.

நாவல் பழத்தில் வைட்டமின் ஏ, சி, பி, மற்றும் போலிக் அமிலம் மற்றும் தாது உப்புக்களான கால்சியம்,பொட்டாசியம்,சோடியம்,
மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. நீர்ச்சத்து மற்றும் நார் சத்துக்களும் இருக்கின்றன. இதை கர்பிணிப்பெண்கள் இந்த நாவல் பழத்தை சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கர்பிணிப்பெண்கள் இந்த பழத்தினை தாராளமாக சாப்பிடலாம். நாவல் பழத்தை சாப்பிடுவதால் பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் ஆன வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்த போக்கு போன்றவற்றிற்கு சிறந்த தீர்வினை அளிக்கிறது.

Loading...

இந்த நாவல் பழம் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தவிர்த்து முதுமையை தள்ளிப்போடும். மற்றும் உடலில் புதியசெல்களை உருவாக்கும் தன்மை இதற்கு உள்ளது. ஆகையால் தோலில் ஏற்படும் அரிப்பு, வெண்புள்ளி போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நாவல் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தோல் பொலிவடையும். மற்றும் வாய்ப்புண் மற்றும் குடல் புண்ணை குணப்படுத்தும்.

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழம்
தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் அதிகமாக சிறுநீர் கழிப்பதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இவை பசியை தூண்டும் தன்மை கொண்டது. இது மிகவும் குளிர்ச்சியான தன்மை கொண்டுள்ளதால் உடலின் சூட்டை தவிர்க்கும். அதுமட்டும் இல்லாமல் மஞ்சள் காமாலையையும் இது குணப்படுத்தும்.சர்க்கரை நோய்க்கு இது ஒரு சிறந்த மருந்து ஆகும்.இது அனைவருக்கும் தெரியும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்கிறது.

ஒவ்வாமை எனப்படும் ஆஸ்துமா நோயையை குணப்படுத்துகிறது. நாவல் பழத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.வறட்டு இருமலை போக்கும் தன்மை நாவல் பழத்திற்கு உண்டு.உடலில் எலும்பின் சத்து மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது. நாவல் பழத்தினை அதிகம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவது குறைகிறது.பித்தத்தை தணித்து மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கும். நாவல் பழத்தின் விதையை காயவைத்து பொடி செய்து அதனை காலையும் மாலையும் ஒரு ஸ்பூன் உட்கொண்டு வருவதால் சர்க்கரை நோயை குணமடைகிறது. இவ்வளவு மருத்துவ குணம் கொண்டது இந்த நாவல் பழம். இந்த செடி உங்கள் வீட்டில் உள்ளதா? அப்போ நீங்கள் தான் பணக்காரர்!!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*