Connect with us

#24 Exclusive

Media தமிழக பாஜகவிற்கு 8 தலைவர்கள் அறிவிப்பு ! இனி அடுத்தது என்ன?

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதி தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யபட்டார் அன்றில் இருந்து இன்றுவரை நாளொரு தலைவரை தமிழக முன்னணி ஊடகங்கள் வெளியிட்டு வந்துள்ளனர்.

இதுவரை தமிழக பாஜகவை சேர்ந்த 8 தலைவர்களை ஊடகங்கள் நியமனம் செய்துள்ளதாக அறிவித்துள்ளன, அதிலும் குறிப்பாக கடந்த வாரம் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான குப்புராம் தேர்ந்து எடுக்கப்பட்டதாகவும், அன்று மாலையே இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என சாட்டலைட் சேனல்கள் ஒளிபரப்பு செய்ததால் பாஜக தொண்டர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது ஆனால் அதன் பிறகு அதுபற்றிய செய்திகள் வெளிவரவில்லை.

தற்போதுவரை H ராஜா, குப்புராம், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், Prof ஸ்ரீநிவாசன், KT ராகவன், கருப்பு முருகானந்தம், AP முருகானந்தம், ஆகிய 8 பேரின் பெயர்கள் கடந்த 100 நாட்களில் ஊடகங்களில் அடிபட்டு வந்துள்ளன, இந்நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகவும் பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Loading...

இதனை தொடர்ந்து பாஜக தொண்டர்கள் யாரும் எந்த செய்தியும் சொல்லவேண்டாம் இனி தலைவர் அறிவிக்கப்படும் போது நாங்களே நேரடியாக தெரிந்து கொள்கிறோம் என்றும் பாஜகவிற்கு ஊடகங்கள் இதுவரை தமிழக பாஜகவிற்கு 8 தலைவர்களை அறிவித்துவிட்டன எனவும் அடுத்தது என்ன எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Loading...

ஆமாம் இந்த தலைவர்தான் யாருப்பா ? அது மோடி அமிட்ஷாவிற்கு மட்டும்தான் தெரியுமோ?

©TNNEWS24

Loading...

Trending