திமுகவினர் இனி வடமாநிலங்களில் நுழைய கூடாது கட்சி கடந்து ஒன்றிணைந்த வட இந்தியர்கள் அதிர்ச்சி பின்னணி !

உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொரோனா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் இக்கட்டான சூழலில் பாகிஸ்தானை சேர்ந்த மத அடிப்படை தீவிரவாதிகள் இப்போதும் இந்தியாவை பழிவாங்க துடித்து வருகின்றனர்.

Loading...

இந்நிலையில் கடந்த மே 3 அன்று ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள வடக்கு காஷ்மீரில் மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

இதில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், இந்த துப்பாக்கிச்சூட்டில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல்துறை துணை கமிஷனர் என மொத்தம் 5 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகர் என்ற 31 வயது இராணுவ வீரரும் வீரமரணம் அடைந்தார்.

Loading...

இந்நிலையில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு நாடுமுழுவதும் அஞ்சலி செலுத்தப்படுகிறது, இராணுவ வீரர்கள் உயிரை பறித்த தீவிரவாத இயக்கத்தினை முழுமையாக அழிக்கவேண்டும் எனவும் கொந்தளித்து வருகின்றனர், பல சிறு அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கூட தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதிக அளவு உறுப்பினர்களை கொண்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிரவாத தாக்குதலை இதுவரை கண்டிக்கவில்லை, திமுக தலைவர் ஸ்டாலின் தீவிரவாத தாக்குதலை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் உயிரிழந்த தமிழக வீரர் சந்திரசேகர் மறைவிற்கு மட்டும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் இராணுவ வீரர்கள் மறைவில் கூட பாகுபாடு பார்க்கும் திமுக என வட இந்தியாவில்கொந்தளிப்பு எழுந்துள்ளது, சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்த வங்கதேசத்தவரை வெளியேற்ற வேண்டும் என CAA கொண்டுவந்தால் அடுத்த நொடியே எதிர்ப்பை பதிவு செய்த திமுகவால், இராணுவ வீரர்கள் உயிர் தியாகத்தை மதித்து தீவிரவாதிகளுக்கு எதிராக அறிக்கை வெளியிட முடியாத எனவும் கண்டித்துள்ளனர்.

அத்துடன் சாவில் கூட அரசியல் பார்த்து அமைதிகாக்கும் திமுக உறுப்பினர்களை விரட்டி அடிக்க வேண்டும் வட மாநிலங்களில் பொது நிகழ்ச்சியில் அனுமதிக்க கூடாது என்றும் கட்சி கடந்து ஒன்றிணைய வேண்டும் எனவும் திமுக உள்ளிட்ட இன்னும் 10 இயக்கங்களின் பெயரை பகிர்ந்து கொந்தளித்து வருகின்றனர்.

CAA விற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால், பாகிஸ்தான் தீவிரவாதிகளை கண்டித்து அறிக்கை வெளியிட முடியாதா? இவர்கள் யாருக்கு அரசியலில் இயக்கம் நடத்துகிறார்கள் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன?

©TNNEWS24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*