இந்தியாவில் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? மத்திய அரசு விளக்கம் !

இந்தியாவில் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? மத்திய அரசு விளக்கம் !

Loading...

இந்தியாவில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற சந்தேகத்துக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 6,00,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 27 ஆக உள்ளது.

Loading...

இந்நிலையில் தொலைக்காட்சியின் மூலம் மக்களிடம் பேசிய மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 5 நாட்கள் முடிந்துள்ள நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் ஆங்காங்கே பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதையடுத்து மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை மக்களுக்கு சில நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. இதை முன்னிட்டு இந்தியாவிலும் ஏப்ரல் 14க்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. இதையடுத்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக மத்திய அரசு ‘ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் எண்ணம் தற்போது வரை இல்லை’ என விளக்கமளித்துள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*