Connect with us

#24 Exclusive

சபரிமலைக்கு பெண்கள் செல்லத்தடை இல்லை வெடித்தது போராட்டம் !

Published

on

டெல்லி:- சபரிமலை விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஆனால் தற்போது 7 நீதிபதிகள் அமர்விற்கு மாற்றி உத்தரவுட்டுள்ளதால். இந்த தீர்ப்பின் மூலம் அனைத்து வயது பெண்களும் தற்போது ஐயப்பன் கோவிலிற்குள் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என்பது தெளிவாவதால் இந்து அமைப்புகள் போரட்டத்தில் இறங்கியுள்ளன.

7 நீதிபதிகள் அமர்வில் சாதகமான தீர்ப்பு வரும் என்று இந்து அமைப்புகள் எதிர்பார்த்து வரும் நிலையில், தற்போது பெண்கள் செல்வதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளதால் இந்த ஆண்டும் சபரிமலையை சுற்றி போராட்டம் வெடிக்கும் என்றும், அதனை அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்றும் மிக பெரிய கேள்வி எழுந்துள்ளது.

தற்போது சபரிமலையை சுற்றி ஏராளமான மக்கள் குவித்து வருவதால் ஏதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமோ என்ற பதற்றம் கேரளா முழுவதும் உருவாகியுள்ளது.

Loading...

©TNNEWS24

Loading...
Loading...

Trending