Connect with us

#24 Exclusive

நித்தியின் கைலாசவுக்கு சென்ற தமிழர் ஒருவர் ! நேபாள எல்லையில் மர்மமான முறையில் சடலமாக மீட்பு முழு விவரம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகையுடன் இருக்கும் வீடியோ வெளியாகும் வரை நித்தியானந்தாவை யார் என்றே பலருக்கும் தெரியாது ஆனால் இன்று பெரும்பாலானோர் அறிந்த ஒருவனாக வளம் வருகிறார் நித்யானந்தா . சமீபத்தில் அவர் தான் ஒரு தனி நாடே உருவாக்கி விட்டதாக அறிவித்து அதன் விவரங்களையும் ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் பதிவேற்றினார்

அது வைரலான நிலையில் தாங்களும் கைலாச செல்வதாக சிலர் கூறிவந்தனர் மேலும் சிலர் கைலாச உண்மையா பொய்யா என்றே அறியாமல் நான் கைலாசாவின் கல்வி அமைச்சர் , நான் ராணுவ அமைச்சர் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் நித்தியின் குஜராத் ஆசிரமத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த சத்தீஷ் செல்வகுமார் என்வனர் தான் கைலாச செல்வதாக கூறி கடந்த மாதம் கிளம்பிய நிலையில்

அவர் நேபாள எல்லையில் சடலமாக இரண்டு நாட்களுக்கு முன் மீட்கப்பட்டுள்ளார் இதில் சோகம் என்னவென்றால் அவர் அனாதை பிணமாக கண்டெடுக்கப்பட்டது தான் . சதீஷின் சடலத்தை கைப்பற்றி அதை பிரேத பரிசோதனை செய்தபின் அதை அவர் பணியாற்றிய குஜராத் நித்தியானந்தா ஆசிரமத்தின் நிர்வாகிகள் பெற்றுச்சென்றுள்ளனர் ,

Loading...

மேலும் அவரது சடலத்தை அவசர அவசரமாக தகனம் செய்துள்ளனர் இது தெரிந்து அதிர்ந்து போயுள்ளார் தமிழகத்தில் உள்ள சதீஷின் அம்மா வனஜா , மேலும் வனஜாவுக்கு போன் செய்த ஆசிரம நிர்வாகிகள் 18 ஆம் தேதி காரியம் செய்யப்போவதாக கூறி அதில் பங்கேற்குமாறு கூறியுள்ளனர் . இது தொடர்பாக காவல் துறையில் புகாரளித்துள்ள சதீஸ் செல்வகுமாரின் அம்மா வனஜா

Loading...

தனது மகன் இறப்பில் பல மர்மங்கள் உள்ளதாகவும் , நித்யானந்தாவின் உத்தரவின் பேரிலேயே தனது மகனின் உடலை அவசர அவசரமாக தகனம் செய்து ஆதாரத்தை மறைத்துள்ளதாகவும் வனஜா குற்றம்சாட்டியுள்ளார் . சதீஷின் மர்ம மரணம் , பெற்றோருக்கு கூட தகவல் சொல்லாமல் அவசரமாக தகனம் செய்தது எல்லாம் வைத்து பார்த்தல் நிச்சயம் இதில் மர்மம் ஒளிந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending