மதக்கலவரத்தை தூண்டிவிட்டு ஜாமீன் வேண்டுமா ஒன்று கூடிய தி.கவினரை விரட்டி அடித்தது நீதிமன்றம் ! இனி மாட்டுக்கறி விருந்து வைப்பீர்கள்?

Loading...

கோவை.,

கோவை பகுதியை சேர்ந்த கடவுள் மறுப்பாளர் நிர்மல் குமாரின் ஜாமீன் மனுவினை ரத்து செய்து கோவை நீதி மன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது, அதில் மதக்கலவரத்தை தூண்டிய குற்றத்திற்காக அவரை நீதிமன்ற காவலில் அடைக்கவும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Loading...

மூன்று வாரங்களுக்கு முன்பு மாட்டுக்கறி சாப்பிட்டு அதனை புகை படம் எடுத்து? மாட்டு கறி சாப்பிட்டால் அடித்து கொல்வாயா? how is it? இந்து மத வெறியர்களே என்று கேட்டு பதிவிட்டிருந்தார்.

யாரும் தங்கள் வீட்டில் மாட்டு கறி சாப்பிடுவதை எதிர்க்கவில்லை ஆனால் அதனை சாப்பிட்டுவிட்டு வேண்டும் என்றே கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் பதிவிட்டு மத கலவரத்தை தூண்டுபவர்களை தான் பலரும் எதிர்த்து கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

முகநூலில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பதிவு செய்த நிர்மல் குமாரை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறை அவரை சிறையில் அடைத்தது, இந்நிலையில் நிர்மல் சார்பில் கோவை நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

அப்போது எதிர்தரப்பு வழக்கறிஞர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திராவிட கழக வழக்கறிஞர் திணறினார், மாட்டு கறி சாப்பிட்டால் யாரும் குற்றம் சுமத்தவில்லை அதே நேரத்தில் அதை பதிந்து மதக்கலவரத்தை தூண்டும் விதமாக அழைப்பு விடுத்துள்ளார். இதே போல் இந்து அமைப்புகள் பன்றி கறியை சமைத்து மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்தால் என்னவாகும் அப்போது இதே பெரியாரிஸ்ட்கள் கருத்துரிமை என்று பன்றி கறி விருந்தை பற்றி பேசுவார்களா?

தொடர்ந்து இந்து மதத்தினையும், இந்து கடவுள்களையும் திட்டமிட்டே அவமதித்து வருகிறார்கள் இப்போது மாட்டுக்கறி தின்று மதக்கலவரத்தை தூண்டுபவர்களை வெளியில் விட்டால் நாளை தமிழகத்தில் மதக்கலவரம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதனை கருத்தில்கொண்டு குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாட்டுக்கறி தின்று மதக்கலவரத்தை தூண்டியது குற்றமே எனக்கூறி ஜாமீனை ரத்து செய்தார். இது காலம் காலமாக தொடர்ந்து இந்து மதத்தினை விமர்ச்சித்துவிட்டு, நீதிமன்றம் சென்று தனது இயக்க வழக்கறிஞர் மூலம் ஜாமீன் வாங்கி பழக்கப்பட்ட பெரியாரிஸ்ட்களுக்கு பேரிடியாக விழுந்தது. இதனை அவர்களால் ஏற்று கொள்ளமுடியாமல் புலம்பி வருகின்றனர்.

இதனால் இனி தமிழகத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டு பொது இடத்தில் பதிவிட்டால் சிறை உறுதி !

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2686 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*