Connect with us

#24 Exclusive

#Exclusive: மிடில் கிளாஸ்க்கு அடித்தது ஆஃபர் ! நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன ?

Published

on

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு தைரியமான முடிவுகளுடன் நடுத்தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் பல்வேறு சலுகைகளுடன் அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இது பொருளாதார மந்தநிலையில் நாடு இருக்கக்கூடிய நிலையில் வெளிவந்திருக்கும் பட்ஜெட் ஆகும். இதில் கூறப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

2020 – 2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவது:
1)வருமானவரி குறைப்பு:
வருடம் 5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம்-7.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு 20% வரியில் இருந்து 10% மாக குறைக்கப்பட்டுள்ளது.
7.5 -10 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி 20% தில் இருந்து 15% மாக குறைக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு 30% வரி 20%மாக குறைக்கப்பட்டுள்ளது.
12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு30% வரி 25% மாக குறைக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு மாற்றமின்றி 30% வருமான வரி வசூலிக்கப்படும்.
வருமான வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது மக்களிடையே பண புழக்கத்தை அதிகரித்து வாங்கும் திறன் அதிகரித்து வர்த்தகம் பெருகும்.

2) விவசாயம் மற்றும் நீர்மேலாண்மை துறை:
விவசாய பொருட்களை கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும். ரூபாய் 15 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்நியக்கப்பட்டுள்ளது. மேலும் 6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் விவசாய பொருட்களை சேமிக்க கிடங்குகள் (Warehouse) அமைக்கப்படும். 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளி மின்சார பம்புகள் வாங்க முழு மானியம் வழங்கப்படும். குடிநீரை பாதுகாப்பு திட்டமான ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் அனைத்து இல்லங்களுக்கும் 2024 குள் நேரடி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2021ஆம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி இலக்கு. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதி மையம் உருவாக்கப்படும்.

Loading...

3) சுகாதாரத்துறை மற்றும் தூய்மை இந்தியா:
சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.69,000 கோடி ஒதுக்கீடு. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம். மேலும் 100 மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காற்று மாசுவை கட்டுப்படுத்த ரூ.4400 கோடி ஒதுக்கீடு. சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

Loading...

4) தொழில்துறை:
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Dividend Distribution Tax (DDT) நீக்கம் நடந்துள்ளது. நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த DDT வரி நீக்கப்பட்டுள்ளது. மேலும் தாய் நிறுவனங்கள் பெற்று வந்த Dividendகளுக்கு வரி கழிப்பு அனுமதிக்கப்படும். ரியில் எஸ்டேட் துறைக்கு மேலும் ஓர் ஆண்டுக்கு வரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதிய நிறுவனங்கள் ₹25 கோடிக்கு கீழ் turnover செய்தால் முதல் 3 ஆண்டுக்களுக்கு வரி விதிப்பு இல்லை.

5) உள்கட்டமைப்பு:
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 101 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். 2,500 கிமி தேசிய சாலை அமைக்கப்படும், 9,000 கிமி பொருளாதார வழித்தடம் அமைக்கப்படும், 2,000 கிமி க்கு கடலோரமாக சாலை அமைக்கப்டும் மற்றும் 2,000 கிமி க்கு Strategical Corridor சாலைகள் அமைக்கப்படும். டெல்லி-மும்பை விரைவு பசுமை வழி சாலை 2021க்கு முன் முடிக்கப்படும். சென்னை-பெங்களூரூ விரைவு பசுமை வழிச்சாலை விரைவில் தொடங்கப்படும். 27,000 கிமி க்கு ரயில் வழித்தடம் மின்சார மயமாக்கப்படும். மேலும் பல்வேறு புதிய தேஜஸ் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு நாட்டின் பழமையான, ஆன்மீக சுற்றுலா மற்றும் கலாசார நகரங்கள் இணைக்கப்படும். மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லாங்குழல் ரயில் விரைவில் முடிக்கப்படும். நாட்டில் உள்ள துறைமுகங்களில் சிலவற்றை தனியார் பங்களிப்புடன் நிர்வகிக்கவும் பங்கு சந்தையில் List செய்யப்படும். ஜல்விகாஸ்மார்க் திட்டத்தின் கீழ் தேசிய நீர் வழித்தடம் -1 விரைவில் முடிக்கப்பட்டு 890 கிமி தூப்ரி-சாதியா நீர் வழித்தடம் 2022 க்கு முன் முடிக்கப்படும். ஏற்கனவே வாரணாசி-கொல்கத்தா நீர் வழித்தடம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடதக்கது. 100 புதிய விமான நிலையங்கள் 2024ஆம் ஆண்டுக்கு முன் அமைக்கப்படும். இது உதான் திட்டத்தின் கீழ் இயக்கப்படும். இதன் மூலம் உதான் திட்டத்தில் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 600ல் இருந்து 1200ஆக உயரும். மேலும் 1 லட்சம் கிராமங்களுக்கு இலவச ஃபைபர் நெட் வசதி செய்துதரப்படும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending