Connect with us

அரசியல்

மூன்று மாதங்களுக்கு உங்களுக்கு என்ன கிடைக்கும் இதோ அதிரடி சலுகைகளை அறிவித்த நிதியமைச்சர்

21 நாட்கள் முழு ஊரடங்கு நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது முதற்கட்டமாக இந்த முறை பசியினை போக்கும் பொருட்டும் மேலும் கொரோனவை எதிர்த்து போராடுபவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன நிதியமைச்சர் கூறியது பின்வருமாறு :-
உடனடியாக உதவி தேவைப்படும் ஏழைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர்களுக்கு 1,70,000 கோடி ஒதுக்கீடு, யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவிகள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும்

கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு மருத்துவர்கள், செவிலியர்கள் வெள்ளை நிற உடை அணிந்த கடவுள்கள், 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும், வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும், இந்த திட்டத்தின் மூலம், உணவில்லாமல் யாரும் பாதிக்கப்படாத நிலை ஏற்படும்.,

Loading...

இந்த திட்டங்களின் அடிப்படையில், பொருட்கள் 2 தவணையாக வழங்கப்படும், விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்
விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும், 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர், முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்

Loading...

இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்

20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும்

மகளிர் குழுக்களுக்கு தீன் தயாள் திட்டத்தின் கீழ், ரூ.20 லட்சம் கடன் வழங்கப்படும் முறைசார் தொழிலாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வைப்பு தொகையை அரசே வழங்கும், 100 ஊழியர்களை கொண்ட நிறுவனத்தில், ரூ.15000க்கும் கீழ் 90% பேர் சம்பளம் வாங்கும் பட்சத்தில், இந்த திட்டம் பயனளிக்கும், வருங்கால வைப்பு நிதியின் 75% அல்லது 3 மாத சம்பளத்தில், எது குறைவோ அதை முன் தொகையாக எடுத்து கொள்ளலாம்

கட்டட தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் நிதியை, மாநில அரசுகள் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம் இதன் கீழ் 31 ஆயிரம் கோடி நிதியை, 3.5 கோடி பதிவு செய்யப்பட்ட கட்டட தொழிலாளர்களுக்காக, மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

©TNNEWS24

Loading...

Trending