பதவியை இழக்கிறாரா நிர்மலா சீதாராமன்? புதிய நிதியமைச்சர் இவர்தான் !

பதவியை இழக்கிறாரா நிர்மலா சீதாராமன்? புதிய நிதியமைச்சர் இவர்தான் !

Loading...

நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனிடம் இருந்து அந்த பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே வி காமத் என்பவர் நியமிக்கப்பட இருக்கிறார்.

மோடி இரண்டாவது முறையாக 2019 ஆம் ஆண்டு ஆட்சிஅமைத்த போது முன்னாள் ராணுவ அமைச்சரனா நிர்மலா நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். இதுவரை இரண்டு முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஆனால் 2 ஆண்டுகளாகவே அவரது செயல்பாடுகள் எதுவும் மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் அவர் மேல் கடுமையாக விமர்சனம் வைத்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சொந்த கட்சிக்குள்ளேயே இருக்கும் சுப்ரமண்ய சுவாமி போன்றவர்கள் நிதியமைச்சருக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது எனக் கூறி விமர்சனம் செய்தார்.

Loading...

சமீபத்தில் கொரோனா நிவாரணத்துக்காக இரண்டு நிதித் தொகுப்புகளை அறிவித்திருந்தார் நிர்ம்லா சீதாராமன். அதிலும் ஏழை மக்களுக்கான எந்தவொரு நல்ல திட்டமும் இல்லை என விமர்சிக்கப்பட்டத்.  இந்நிலையில் நிதியமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படலாம் என செய்திகள் பேசப்பட்டு வருகின்றன. அவருக்குப் பதிலாக கே.வி.காமத் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது சம்மந்தமாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கார்த்திக் சிதம்பரம் ‘“A little birdie tells me that “cometh” the hour in North Block’ எனக் குறிப்பிட்டது மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

புதிய நிதியமைச்சர் பதவிக்குப் பரிந்துரைக்கப்படும் கே வி காமத் ஒரு மூத்த வங்கியாளர். பல்வேறு வங்கிகளின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டவர். காமத் பிரிக்ஸ் அமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக இருந்த அவர் கடந்த வாரம்தான் அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*