NIA கட்டுப்பாட்டில் வந்தது திருச்செந்தூர் மொய்தீன் பாத்திமா வீட்டில் சோதனை ! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

NIA கட்டுப்பாட்டில்  வந்தது  திருச்செந்தூர் மொய்தீன் பாத்திமா வீட்டில் சோதனை ! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தமிழகத்தில் மிக பெரிய அசம்பாவித சம்பவங்கள் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, மதம் மாற்றத்தை தடுத்த இராமலிங்கம் அன்று இரவே வெட்டி படுகொலை செய்யப்பட்டார், அதன் பிறகு இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கொலைகள் அரங்கேறின இது குறித்த வழக்குகள் NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில் இந்தியாவைவே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மற்றொரு சம்பவம் நடைபெற்றது, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார், இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் பயங்கரவாதிகள் சமீம், தவுபிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கும் NIA வசம் மாற்றப்பட்டது, அதனையடுத்து மீடியா, ஊடகங்களில் காவலர் வில்சன் குறித்த விசாரணை செய்திகள் வெளியாகவில்லை இந்நிலையில் NIA நடத்திய புலனாய்வு விசாரணையில் மிக பெரிய கும்பல் ஒன்று இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கோவை, தேவிபட்டினம், சித்தார்கோட்டை, பெரியமேடு, காயல்பட்டினம், தேவகோட்டை ஒத்தக்கடை, சென்னை புதுப்பேட்டை, பரங்கிமலை, நெய்வேலி ஆகிய இடங்களில் இருந்து செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

Loading...

இதற்கென தனி குழு அமைத்து பல இடங்களில் NIA தகவல்களை திரட்டி இருக்கிறது இறுதியாக இன்று திருச்செந்தூர் காயல்பட்டினத்தில் NIA அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், எப்போதும் வழக்கமான சோதனைகளை காட்டிலும் மாவட்ட எல்லைகள் உட்பட அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading...

முதற்கட்டமாக மொய்தின் பாத்திமா எனபவர்களது வீட்டில் சோதனை நடைபெறுகிறது, அவர்கள் காவலர் வில்சனை கொலை செய்த பயங்கரவாதிகள் தவுபிக், சமீம் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்து வங்கதேசம் தப்பி செல்ல உதவ முன் வந்ததாகவும், இது போல் வங்கதேசத்தில் இருந்து பலரை இந்தியாவிற்குள்ளும், இந்தியாவில் இருந்து தீவிரவாத பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பலரை வங்கதேசத்திற்கும் அனுப்பும் வேலையை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.

ஒட்டுமொத்த நபர்கள் குறித்தும் ஆதாரங்களை திரட்ட இப்போது இந்த நடவடிக்கையில் NIA திருச்செந்தூர் காயல்பட்டினத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன, மொய்தீன் பாத்திமா வீட்டில் தற்போது நடைபெற்று வரும் சோதனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் எனவும் இதன்மூலம் பல்வேறு சதித்திட்டங்கள் குறித்த திட்டம் வெளியாகலாம் என்ற அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

ஒரு காலத்தில் தமிழகம் தேசப்பற்று கொண்ட மாநிலங்களுக்கு அடையாளமாக திகழ்ந்தது, ஆனால் தற்போது பயங்கரவாதிகள் அதிகம் பிடிபடும் மாநிலங்களில் முன்னணி பட்டியலில் தமிழகம் இடம்பிடித்து வருவதாக பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *