Connect with us

#24 Exclusive

அடுத்தது யாரு பாதுகாப்பு !!தெறிக்கவிட்ட அமிட்ஷா !!பாதியில் வெளியேறிய திமுக எம் பி கள்.

டெல்லி :- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அனைத்து கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்று வருகின்றனர். இதில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தினை திமுக எதிர்க்காமல் பாதியில் வெளியேறிய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது, இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அவரது தொண்டர்கள் வரை அனைவரும் டெல்லியை தமிழகத்தை சேர்ந்த திமுக எம் பி கள் கதிகலங்க செய்வார்கள் என்றும் மத்திய அரசை நாடாளுமன்றத்திலேயே எதிர்த்து சிதறவிடுவார்கள் என்று தெரிவித்தனர்.

போதாதகுறைக்கு தமிழகத்தை சேர்ந்த ஊடகங்களும் வென்றுவாருங்கள் சிங்கப்பெண்ணே என்றெல்லாம் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறினர்.

Loading...

ஆனால் நாடாளுமன்றத்திலோ தொடர்ந்து திமுக எம் பி கள் பூனையை விட பம்மி பம்மி நடந்துவருகின்றனர் என்பது நேற்றும் நிரூபணமாகியது, முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான SPG என படும் சிறப்பு பாதுகாப்பு விலக்கிகொள்ளப்படும் என்றும் இனி பிரதமருக்கு மட்டுமே அந்த பிரிவு பாதுகாப்பு வழங்கும் என்று அறிவித்தது.

Loading...

அதனை தொடர்ந்து திமுக மிக பெரிய அளவில் எதிர்ப்பை பதிவு செய்தது , காங்கிரஸ் கட்சியை விட அதிகமாக சோனியாகாந்தியின் குடும்பத்தின் மீது அக்கறைகொண்டதாக தன்னை காட்டிக்கொண்டு நாடாளுமன்றத்தில் மிக ஆக்ரோஷமாக திமுக எம் பி டி ஆர் பாலு பேசினார். ஆனால் நேற்று விவாதத்தின் போது அமிட்ஷா பேசிய பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.

யாரெல்லாம் spg பாதுகாப்பினை விலக்கி கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களோ அவர்களை நேருக்கு நேர் பார்த்து அமிட்ஷா பொரிந்து தள்ளிவிட்டார் அதிலும் குறிப்பாக திமுக உறுப்பினர்களை பார்த்து நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அதாவது 130 கோடி மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் அதையே நாங்கள் செய்கிறோம் அதில் சோனியா குடும்பமும் அடங்கும் என்று தெரிவித்தார்.

சிலர் அரசியல் நோக்கத்திற்காக இங்கு ஒன்றும் அங்கு ஒன்றும் பேசுவார்கள் என தெரிவித்தார் அமிட்ஷா இறுதியில் SPG மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது, திமுக எதிர்த்து வாக்களிக்கும் என்று எதிர்பார்த்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்த்த நிலையில் நடுநிலை வகிப்பது போல் திமுக எம் பி கள் வாக்கெடுப்புகள் கலந்து கொள்ளாமல் பாதியில் வெளியேறிவிட்டனர்.

இந்த தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில் நாடாளுமன்றத்தை கதிகலங்க செய்வார்கள் என்று திமுக எம் பி கள் சொல்லிவிட்டு சென்றார்கள் ஆனால் தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்து வருகிறார்கள் இதுதான் திமுக சொன்ன தெரிவிக்க விடும் செயலா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர், போதாதகுறைக்கு..,

லைவில் அனைத்து அவை நடவடிக்கைகளும் வருவதால் ஆதரவு ஊடகத்தினை வைத்தும் மக்களை திசை திருப்ப முடியாதே என கவலையில் ஆழ்ந்துள்ளனராம் இந்நிலையில் அடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுவரும் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பினை விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், எந்த அச்சுறுத்தலும் இல்லாத காரணத்தால் இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Trending