Connect with us

#24 Exclusive

நெல்லை கண்ணன் இருக்குமிடம் அடையாளம் தெரிந்தது ! காவல்துறைக்கு முன்னர் விரைந்த பாஜகவினர்!

நெல்லை : பட்டிமன்ற பேச்சாளரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நெல்லை கண்ணன் தலைமறைவாகி இருந்த நிலையில் அவர் இருப்பிடத்தை பாஜகவினர் அடையாளம் கண்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரு காலத்தில் சிறந்த பட்டிமன்றம் பேச்சாளராக இருந்தவர் நெல்லையை சேர்ந்த கர்ணன், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நெல்லை கண்ணன் தன்னை காமராஜர் ஆதரவாளர் என மக்களிடத்தில் கூறிக்கொள்வார், சமீப காலமாக மருத்துவமனையில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்ட அவர் தொடர்ந்து பாஜக தலைவர்களை ஒருமையில் விமர்சனம் செய்தார், செல்லும் விழாக்களில் எல்லாம் பிரதமர் மோடி, அமிட்ஷா ஆகியோரை எவ்வளவு தரக்குறைவாக பேசமுடியுமா அந்த அளவு பேசினார்.

மருத்துவனை சிகிச்சைக்கு முக்கிய தலைவர் ஒருவர் பல லட்சம் பணம் கொடுத்ததாகவும் மேலும் முத்த மகன் படம் இயக்க பணம் தருவதாகவும் அந்த தலைவர் உத்தரவாதம் கொடுத்ததாக கூறப்படுகிறது, அதனை தொடர்ந்தே தனது பாதையை நெல்லை கண்ணன் மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது, இந்நிலையில் நெல்லையில் நேற்று முன்தினம் (29/12/19) அன்று இஸ்லாமிய மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் அமிட்ஷாவை மீண்டும் தரக்குறைவாக பேசினார்.

Loading...

அத்துடன் நீங்கள்(முஸ்லிம்களை நோக்கி ) அமிட்ஷா கதையை முடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் ஒன்றும் நடக்க மாட்டுதே என்று கொலையை தூண்டி விடும் நோக்கில் பேசினார் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் கடும் வைரலானது பாஜக ஸ்ரீனிவாசன் இந்த வீடியோவினை பகிர்ந்து நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார், மேலும் பாஜக தேசிய செயலாளர் H ராஜா சென்னை கமிசினர் அலுவலகத்தில் புகார் ஒன்றிணை அளித்தார் அங்கு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

Loading...

இந்நிலையில்தான் நயினார் நாகேந்திரன் குழுவினர் நேரடியாக நெல்லை கண்ணனை நோக்கி களம் இறங்கியதாக கூறப்படுகிறது, ஒரு கட்டத்தில் பாஜகவினர் கேரளாவில் ஜாமியா பல்கலைகழகத்தில் பயிலும் மாணவி ஆயிஷா பினராயி விஜயன் குறித்து பேசியபோது எவ்வாறு மேடையிலேயே மிரட்டி மாப்பு கேட்க வைத்தனரோ அதே பாணியில் நெல்லை கண்ணன் போன்றோரை ட்ரீட் செய்தால் மட்டுமே வரும்காலத்தில் இவ்வாறு நடக்காது என வலியுறுத்தினர்.

இந்நிலையில் நெல்லை கண்ணன் தனது வீட்டின் உள்ளேயே பதுங்கி இருந்ததும் அவரது மொபைலை மட்டும் பெங்களூரு பார்ட்டரில் சென்று ஆன் செய்து சுவிட்ச் ஆப் செய்ததாக கூறப்படுகிறது, இதனை அடுத்து அங்கு பாஜகவினர் குவிந்துள்ளனர்.

இதற்கு இடையில் சமூக ஆர்வலர் பானுகோம்ஸ் நெல்லை கண்ணனை காவல்துறையினர் கைது செய்வதற்கு பதில் தேசிய புலனாய்வு அமைப்பு நேரடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending