உலகின் மிகச்சிறந்த 100 இடங்களில், இந்தியாவின் முக்கியமான இடம் தேர்வாகியுள்ளது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றால், எல்லோரும் சொல்லும் ஒரே பெயர் சர்தார் வல்லபாய் படேல். நமது நாடு சுதந்திரம் அடையும் பொது பிரிந்து கிடந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்தவர் படேல். இதனால் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியவர் என்ற பட்டத்தையும் அவர் பெற்றார்.

Loading...

அப்படிப்பட்ட தலைவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் , குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணை அருகே 183 மீட்டர் உயரம் கொண்ட சிலையை மத்திய அரசு அமைத்தது. அதை பாரத பிரதமர் மோடி படேலின் பிறந்தநாளன்று திறந்து வைத்தார். இது ஒற்றுமைக்கான சிலையாக பார்க்கப்படுகிறது. இந்த சிலை தான் உலகின் மிக உயரமான சிலையும் கூட. இந்த சிலைக்கு ஒரு புதிய கவுரவத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வழங்கியுள்ளது.

இந்த பத்திரிகையானது உலகின் 100 சிறந்த இடங்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து அந்த பட்டியலை வெளியிடும். அப்படி இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் படேல் சிலையும் இடம்பிடித்துள்ளது.
இதுபற்றி அந்த பத்திரிக்கை கூறியதாவது, உலகிலேயே மிக உயரமான சிலை 182 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, அது குஜராத் மாநிலம் நர்மதா ஆற்று தீவில் அமைந்திருக்கிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் துணை பிரதமராக இருந்த படேலுக்கு , சுற்றுலா பயணிகள் இந்த சிலை வாயிலாக மரியாதை செலுத்துகிறார்கள். மேலும் இந்த சிலை ஒற்றுமையின் சின்னமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி நியூயார்க் “டைம்ஸ் ” பத்திரிகைக்கு நன்றி சொல்லி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

Loading...
Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*