3 வருடத்திற்கு ஒருமுறை கணக்கு ! சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு ! போலி ஊடகத்தினருக்கு ஆப்பு !!!

இந்தியா சீனா விவகாரம் எல்லையில் சற்று தணிந்துள்ள சூழலில் தமிழகத்தில் ஊடகவியாளர்கள் செயல்பாடு குறித்த விவாதம் இரண்டு தரப்பிலும் ஆதரவு எதிர்ப்பு என ஓடிக்கொண்டு இருக்கிறது, இந்த சூழலில் மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் இயற்றிய சட்டம் ஊடகத்துறையில் இருக்கும் சில கருப்பு ஆடுகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

Loading...

அதன்படி இனி ஜம்மு காஷ்மீர் ஊடகத்தினர் அரசு விளம்பரத்தை பெற வேண்டும் என்றால் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பதிவிட கூடாது என்றும் , மேலும் போலி செய்தி வெளியிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது, அத்துடன் அங்கு பணியாற்றும் ஊடகவியாளர்கள் நிருபர்கள் உட்பட பணியில் சேர..,

தாங்கள் இந்தியாவிற்கு எதிரான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டது இல்லை என மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள உளவுத்துறை அமைப்பிடம் செக்யூரிட்டி கிலியரன்ஸ் பெறவேண்டும் என ஊடக சட்டம் 2020 திருத்தம் கொண்டுவந்தது. இந்நிலையில் இதனை மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உண்டாக்கப்பட்ட சட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின..,

Loading...

இந்நிலையில் அளவிற்கு அதிகமான ஊடக சுதந்திரம் என்ற பெயரில் சில பத்திரிகை மற்றும் அதில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளில் இருந்தும் மற்றும் அரசியல்வாதிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சந்தேகத்திற்கு விதமாக நாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கண்டறியபட்டுள்ளது. இதனை உளவு அமைப்புகளும் மத்திய அரசிடம் ஆதாரங்களுடன் சமர்பித்துள்ளன.

மேலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அளவிற்கு அதிகமான ஊடக சுதந்திரங்கள் மூலம் இப்போது அந்நாட்டின் பல பத்திரிகை/ ஊடகங்களை சீனா மறைமுகமாக கையகப்படுத்தி இருப்பதை அந்நாட்டு அதிபர் டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார், இதே நிலைமை விரைவில் இந்தியாவில் உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில் வருகிற நாடாளுமன்ற கூட்ட தொடரில் சில ஊடகங்களின் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டுவர இருப்பதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்திரிகை நிறுவனங்கள், ஊடகத்தில் பணியாற்றும் நபர்கள் தங்களது சொத்துக்களுக்கு கணக்கு காட்டவேண்டும் என்று திருத்தம் செய்ய இருக்கிறதாம்.

மேலும் ஊடகத்தினர் தீவிரவாத இயக்கங்கள், தடை செய்யபட்ட இயங்கங்கள், பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் படி பத்திரிகை மூலமாகவோ, அல்லது சமூக வலைத்தளங்களிலோ கருத்துக்களை வெளியிட்டால் அவர்களை கைது செய்ய வழிவகுக்கும் வகையில் சட்ட திருத்தங்கள் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் தமிழகத்தில் பல்வேறு ஊடகங்கள், பத்திரிக்கையில் பணியாற்றும் பலர் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது, இந்த சட்டம் சாத்தியமாகுமா என்ற கேள்விக்கு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி இரண்டாக பிரித்த மோடியால், இதை எளிதாக நிறைவேற்றிவிடுவார் என்றே ஆளும் தரப்பில் இருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*