தனியார் நெறியாளர் செந்தில் வேலைக்கு ஆப்பு? அடுத்தது எந்த சேனல்?

தனியார் செய்தி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் செந்தில் என்ற செந்தில்வேல் அந்த நிறுவனத்தில் இருந்து விரைவில் வேறு நிறுவனத்திற்கு மாற இருப்பதாகவும் அதற்கு அவர் சமூக வலைத்தளங்களில் சீனாவின் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக மறைமுகமாக கிண்டல் செய்து பதிவிட்டதே காரணம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Loading...

இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனா ராணுவ வீரர்களால் இந்தியாவை சேர்ந்த 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்( தமிழகத்தை சேர்ந்த பழனி என்ற வீரர் உட்பட) , சீனா தரப்பில் 43 பேர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது, இதனையடுத்து இந்தியா சீனாவை புறக்கணிக்கும் முடிவில் இறங்கியது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் செயல்பட்ட சீனாவை சேர்ந்த 59 செயலிகளை தடை செய்தது, இதற்கு பல தரப்பிலும் ஆதரவு அதிகரித்த நிலையில் ஊடகத்தில் பணியாற்றும் சிலர் வழக்கம் போல் தங்களது சீன ஆதரவு நிலையை எடுத்து கிண்டல் செய்ய தொடங்கினர் அதில் ஒருவர் தான் செந்தில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சீப்பை ஒளிச்சு வச்சுட்டோம் இனி கல்யாணம் எப்படி நடக்கும் என்று கிண்டல் செய்திருந்தார்.

Loading...

இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது, ஊடகத்தில் பணியாற்றும் ஒருவர் தங்கள் அரசியல் சார்பை நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையிலா காட்டவேண்டும் என செந்திலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், மாரிதாஸ் குழுவினர் செந்திலை கண்டித்து வீடியோ ஒன்றிணை வெளியிட்டதுடன் ஆப் தடைமூலம் சீனாவிற்கு உண்டான இழப்பை சுட்டி காட்டியதுடன், இதுகூட தெரியாமல் நீங்களெல்லாம் ஏன் ஊடகத்தில் பணியாற்றுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் NEWS18 தொலைக்காட்சி தொழிலதிபர் அம்பானிக்கு சொந்தமானது, தமிழகத்தில் இந்த ஊடகத்தை தவறாக செந்தில் போன்ற நபர்கள் தேசவிரோதமாக நடத்துவதாக குறித்து பல்வேறு புகார்களை அளித்திருந்தனர், மேலும் தேசிய அளவில் இந்த விவகாரம் வெளியே வந்தால் அது news 18 குழுமத்தின் பெயருக்கு இழப்பு என்று தெரிவித்திருந்தனர்.

புகார் பதிவு :- https://m.facebook.com/story.php?story_fbid=1124691644583111&id=100011268588997

இதனையடுத்து செந்திலை வெளியேற்ற நிர்வாகம் முடிவு எடுத்து இருப்பதாகவும், செந்திலிடம் விளக்கம் கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன, ஒரு மாதம் அல்லது ஓரிரு மாதங்களில் செந்தில் தமிழகத்தில் வேறு ஏதேனும் நிறுவனத்தில் பணியாற்றலாம் என கூறப்படுகிறது.

கார்ப்பரேட் எதிர்ப்பு போராளியான செந்தில் இந்தியாவின் மிக பெரிய கார்பொரேட் பணக்காரர் அம்பானி நடத்தும் நிறுவனத்திலேயே பணியாற்றிக்கொண்டு கார்ப்பரேட் எதிர்ப்பு வேஷம் போட்டவர் என அவருடன் மற்றொரு ஊடகத்தில் பணிபுரிந்த சக ஊழியர் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. செந்தில் இதற்கு முன்னர் News7, புதியதலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றி வெளியேறியதால் தற்போது வேறு எங்கு பணிக்கு சேரப்போகிறார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3919 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*