Connect with us

#24 Exclusive

ரஜினியின் கருத்திற்கு பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் ஆதரவு !நாம் கேட்கவில்லை என்றால் யார் கேட்பது என ஆவேசம் !

துக்ளக் 50 வது ஆண்டுவிழாவில் ரஜினி பேசிய பேச்சுக்கள் தற்போது மீண்டும் அனைவரதும் பார்வையை 1971- ம் ஆண்டினை நோக்கி அழைத்து சென்றுள்ளது, அதிலும் குறிப்பாக நேற்று அவரது பேச்சு ஒட்டுமொத்த ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈவெரா எனும் பெரியார் சேலம் மாநாட்டில் இந்து கடவுள்களை அவமதித்தாரா என்ற கேள்வியை இந்தியா முழுவதும் எழுப்பியுள்ளது.

ரஜினியின் கருத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே செல்கிறது இதுநாள் வரை வெளியில் கருத்து கூற முயலாத பலரும் தற்போது வெளிப்படையாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் 90 களில் மிகவும் பிரபலமான செய்தி வாசிப்பாளரான சோபனா ரவி தனது ஆதரவினை ரஜினிக்கு தெரிவித்ததோடு தனது கருத்தினையும் தெரிவித்துள்ளார், இது குறித்து சமூகவலைத்தளத்தில் அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-

ரஜினி நீங்கள் சொன்னதைப் பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. ஆமாம், ராமரும் சீதாவும் அவமானப்படுத்தப்பட்டார்கள், அவர்கள் அவரை செருப்புகளால் மாலை அணிவிக்கத் துணிந்தார்கள் என்பது எனக்கு இன்னும் வலிக்கிறது! துக்ளக்கில் வெளிவந்த படங்கள் எனக்கு நினைவிருக்கிறது. அந்த இளம் வயதில் கூட நான் திகைத்தேன், ராமருக்காக நாம் பேசவில்லை என்றால் வேறு யாருக்காக நாம் பேச போகிறோம் என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

Loading...

1975 ம் ஆண்டு செய்தி வாசிப்பாளராக பொதிகையில் (தூர்தர்சன் ) பணியாற்றி 2006 ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றவர் சோபனா ரமேஷ் என்பதும் அப்போதைய 1971 – ம் ஆண்டு காலகட்டத்தில் அவர் கல்லூரியில் பயின்றதாகவும், ரஜினி சொன்ன கருத்துக்கள் உண்மைதான் எனவும் அவர் கருத்து தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending