தொடர் புகார் எதிரொலி தனது ஊழியர்களுக்கு புதியதலைமுறை நிர்வாகம் அதிரடி உத்தரவு !

தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் ஒரு சார்புடைய பத்திரிகையாளர்கள் பணிபுரிந்து வருவதுடன் இவர்கள் தொடர்ந்து ஒரு கட்சிக்கு ஆதரவாக செய்யப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது, இது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விவாதம் எழுந்தது மேலும் இந்த செய்திகள் இந்திய அளவில் மிக பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கின.

Loading...

இந்த சூழலில் தனியார் தொலைக்காட்சியான News18 தமிழ்நாடு தனது ஊழியர்கள் மீது விசாரணை நடத்தி, சிலரை பணியில் இருந்து நீக்கியது, சிலர் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர், இந்த சூழலில் குணசேகரனும் இன்று தனது பணியை ராஜினாமா செய்தார், இந்நிலையில் நேற்று BARC கடந்த வாரத்திற்கான TRP பட்டியலை வெளியிட்டது.

அதில் வழக்கம் போல் பாலிமர் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் சன் நியூஸ், மூன்றாவது இடத்தில் தந்தி தொலைக்காட்சி இடம்பெற்றது, ஆனால் புதிய தலைமுறை மற்றும் NEWS18 தமிழ்நாடு ஆகியவை நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்தன, இது புதிய தலைமுறை நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, அதோடு மக்கள் மனநிலை மாறி வருவதையும் ஊடகங்களின் பார்வையாளர்கள் குறைந்து வருவதையும் அது கண்டறிந்துள்ளது.

Loading...
BARC WEEK 29

இதே நிலையில் சென்றால் ஊடகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவும் கண்டறிந்த நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது, அதில் இனி புதிய தலைமுறையில் பணியாற்றும் நபர்கள் தங்கள் சொந்த அரசியல் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட கூடாது எனவும் இதன் மூலம் தனது விதிகளை மாற்றியிருக்கிறது.

தொடர்ந்து ஒரு தலை சார்பாக ஊடகங்கள் நடந்து வருவதாக பலர் குற்றம் சாட்டிய நிலையில் அந்த ஊடகங்களின் பார்வையாளர்கள் வெகுவாக குறைந்து இருப்பது ஊடகங்களின் நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளன. விரைவில் மற்ற ஊடகங்களும் தங்கள் பணியாளர்களுக்கு இதே உத்தரவை பிறப்பிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*