Connect with us

உலகம்

ரொம்ப கோபக் காரியா இருப்பா போலயே ? – இணையத்தில் வைரலான சுட்டிக் குழந்தை !

பிரேசிலில் பிறந்த குழந்தை ஒன்று மருத்துவரை முறைத்துப் பார்க்கும் புகைப்படம் உலக அளவில் வைரலாகி வருகிறது.

பிரசவத்தின் போது பிறக்கும் குழந்தைகள் வீல் என்று அழுவது வாடிக்கை. அப்படி அழாத குழந்தைகளை மருத்துவர்கள் ஏதாவது செய்து அழ வைப்பார்கள். ஆனால் முதல் முறையாக ஒரு குழந்தை, மருத்துவரை முறைத்துப் பார்த்து உலக அளவில் வைரல் ஆகியுள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டயானே டிஜீசஸ் பார்போசா என்ற பெண்ணுக்கு அண்மையில் பிரசவம் நடந்தது. பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் அந்த குழந்தை அழாமல் இருந்தது. இதனால் மருத்துவர் அந்த குழந்தையை அழ வைப்பதற்காக லேசாக கிள்ளியுள்ளார்.

Loading...

ஆனால் அதற்கு அந்த குழந்தை அழாமல் புருவத்தை சுருக்கி கோபமாக மருத்துவரை பார்ப்பது போல் மறைத்துள்ளது. குழந்தையின் முதல் புகைப்படத்தை எடுப்பதற்காக அவரது தாயால் நியமிக்கப்பட்ட புகைப்படக்காரர், இந்த தருணத்தை உடனடியாக தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். அதன்பின்னர் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதும் குழந்தையை வழக்கம் போல அழுதுள்ளது.

Loading...

இதையடுத்து அந்தத் தாய் தனது குழந்தையின் அழகான அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி இப்போது அந்த புகைப்படம் உலக அளவில் வைரல் ஆகியுள்ளது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending