#EXCLUSIVEபிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதம் !!

நம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பாதுகாக்கும் படையான சிறப்பு பாதுகாப்பு குழு புதிய ஆயுதம் வாங்க திட்டமிட்டு உள்ளது.

Loading...

நம் நாட்டின் முன்னாள் பிரதமர் திரு. ராஜிவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர் நம் நாட்டின் பிரதமர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்பு தான் சிறப்பு பாதுகாப்பு குழு – (Special Protection Group – SPG).

இந்த படையானது மிகவும் நவீன ஆயுதங்களை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற அமைப்பாகும்.

Loading...

FN p90 PDW, FN 2000 , Glock 17 மற்றும் Block 19 ஆகிய ஆயுதங்களை தற்போது பயன்படுத்தி வருகின்றனர் மேலும் இவை அனைத்தும் வெளிநாட்டு தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது முதல் முறையாக இவர்களது ஆயுதங்களில் ஒன்றாக நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட JVPC எனும் கார்பைன் ரக துப்பாக்கி வாங்கப்பட உள்ளது.

இதன் செயல்திறன் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது , இந்த துப்பாக்கியை மத்திய ரிசர்வ் காவல்படை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இந்திய தயாரிப்பு ஆயுதங்களுக்கு மற்றொரு உந்துதல் கிட்டியுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*