Connect with us

#24 Exclusive

ஒரே சட்டம் தேசவிரோத பத்திரிகையாளர், நடிகர்கள், பிரிவினைவாதிகளுக்கு ஆப்பு வைத்தது மோடி அரசு ! முதல் நபராக உள்ளே செல்லும்.

டெல்லி.,

உள்துறை அமைச்சர் அமிட்ஷா சமீபத்தில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தமிழகத்தில் எந்த இயக்கமோ, ஊடகமோ ஏன் கருத்து சொல்லும் நடிகர்களோ வாய் திறக்காமல் இருக்கிறார்கள் ஏன் என்று தெரியுமா? ஆம் இனி தேசத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு ஆதரவாக வாய் திறந்தால் ஜெயிலுக்கு போவது மட்டுமல்ல, சொத்துக்களும் பறிமுதல் ஆகும்.

Loading...

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய இந்த உரிமைகளை வரையறைக்குள் கொண்டு வர இந்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில், 1967-ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கபட்டது.

Loading...

இந்தச் சட்டத்தின் பிரிவு 35-ன் படி அரசு நினைத்தால் எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும். அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும், தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள்.
அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, அந்த இயக்கத்தின் வெளியீடுகளை வீட்டில் வைத்திருந்தாலோ கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைதுசெய்ய முடியும்.


இந்தச் சட்டத்தின் பிரிவு 43-ன் படி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக 30 நாட்கள் வரை போலீஸ் காவல் வழங்க முடியும். அதிகபட்சமாக ஒரு நபரை 90 நாட்கள் வரை எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்ற காவலில் வைக்க முடியும். அதேபோல், 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஒருவரை சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும்.

இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர், எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. அதேபோல் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் பிரிவு 43-ன் படி, ஜாமீனில் வெளியே வருவது இயலாத காரியம். இந்தச்க் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியில்லை.

உபா சட்டத்தில் 2004, 2008 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா உபா சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை கொண்டுவந்தார் அதில் இனி தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய ஒவ்வொரு தனி நபர்களும் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்படுவார்கள், அப்படி என்றால் இனி அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறைதான் மேலும் அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்து விசாரணை செய்ய NIA அமைப்பிற்கு அதிகாரம் உள்ளது.

இதுகுறித்து அமிட்ஷா பேசுகையில்

தீவிரவாதிகளின் மனதிலேயே மக்களுக்கு எதிரான கருத்துக்கள் இருக்கும். வன்முறைதான் அவர்களின் மனதில் இருக்கும். எத்தனை தீவிரவாத இயக்கங்களை வேண்டுமானாலும் தடை செய்யலாம். ஆனால் இவர்கள் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே இருப்பார்கள். தீவிரவாதிகளை அழித்தால்தான் தீவிரவாதம் ஒழியும். இந்த சட்ட திருத்தம் மூலம் என்ஐஏவிற்கு பலம் கூடும்.

தீவிரவாதத்திற்கு எதிராக கட்சிகளை கடந்து நாம் ஒன்றாக சேர வேண்டும். மக்களுக்காக போராடும் நபர்களை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். ஆனால் நாங்கள் அர்பன் மாவோயிஸ்டுகளை விட மாட்டோம். அவர்கள் மீது கொஞ்சமும் இரக்கம் காட்ட மாட்டோம். அவர்களை ஒடுக்குவதே, அழிப்பதே பாஜக கட்சியின் நோக்கம் என்று அமித் ஷா குறிப்பிட்டு இருக்கிறார்.

இனி தீவிரவாதிகள், தீவிரவாத இயக்கங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகள், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பத்திரிகையாளரோ, நடிகர்களோ யார் பேசினாலும் அவர்களும் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள் இனி நாட்டிற்கு எதிராக செயல்பாடு வெகுவாக குறையும்.

முக்கியமாக கருத்து சுதந்திரம் என்று பேசி தப்பிக்க முடியாது. குறிப்பாக முன்பு பேசியதுபோல் இராணுவமே வந்தாலும் பார்த்து கொள்வேன், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவோ தனி நாடு கோரிக்கை வைத்தால் நடிகர் சத்யராஜ் முதல் ஆளாக உள்ளே போவது உறுதி.

தேர்தல் வாக்குறுதியில் நாட்டு நலனே முக்கியம் என்று மோடி அரசு வாக்கு கேட்டது அதனை தற்போது திறம்பட செய்து கொண்டிருப்பதாக பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

இதற்குத்தான் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என தமிழகத்தில் பலர் எதிர்த்தார்களோ?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

Trending