#BREAKING புதிய தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு வெளியாகிறது !

BREAKING புதிய தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு வெளியாகிறது !

Loading...

டெல்லி.,

பாஜக தேசிய தலைவராக அமிட்ஷா தொடருவார் என்றும் வருகின்ற 6 மாநில சட்டமன்ற தேர்தல்கள் வரை அவர் தலைவர் பதவியில் நீடிப்பார் என்றும், நேற்றையதினம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Loading...

அதனை தொடர்ந்து கேரளா மற்றும் தமிழகத்திற்கு புதிய மாநில தலைவர்களை தேர்ந்தெடுப்பது குறித்த ஆலோசனையில் அமிட்ஷா ஈடுபட்டுள்ளார். கேரளா மாநில பாஜக தலைவராக உள்ள ஸ்ரீதரன் மத்திய அமைச்சராக தேர்வாகியுள்ளதால் அவரது இடத்திற்கும், தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் பதவிக்காலமும் முடிவடைந்துவிட்டதால் இவர்களது பொறுப்பிற்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் பாஜக தலைமை ஈடுபட்டிருந்தது.

அதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவில் தமிழகத்தில் வானதி ஸ்ரீனிவாசன், கருப்பு முருகானந்தம், பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஆகியவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமானதாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வருகின்ற 26-ம் தேதி வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது புதிய பாஜக தலைவர் அறிவிக்கப்பட இருப்பதால் மூவரில் யார் தலைவராக வர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பாஜக தொண்டர்களை தாண்டி பல்வேறு தரப்பினர் இடையே எழுந்துள்ளது.

தமிழகத்திற்கு புதிய மாநில தலைவர் யார் என்பது இன்னும் 12 நாட்களில் தெரிந்துவிடும் !

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...
About Tnnews24 2638 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*