தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர்?

breaking தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமனம் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவராக

Loading...

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 5 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் குடியரசு தலைவர்.

தமிழக பாஜக மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன், கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணியாற்றியவர் தமிழிசை சௌந்தரராஜன், தொடர்ந்து மக்கள் மத்தியில் பாஜகவை எடுத்து செல்வதில் முக்கிய பணியாற்றிவந்தவர்.

Loading...

தமிழகத்தில் இருந்து பாஜக சார்பில் முதல்முறையாக ஒருவர் ஆளுநராக தேர்வாகியுள்ளார் என்றால் அது தமிழிசை சௌந்தரராஜன் மட்டும்தான், இந்நிலையில் தமிழிசை தெலுங்கானா ஆளுநராக தேர்வாகியிருப்பதால் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட இருக்கிறார்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்றும் அதில் வானதி ஸ்ரீனிவாசனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக பதவி ஏற்கும் தமிழிசைக்கு, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*