Connect with us

விளையாட்டு

இந்தியா சொன்ன புதிய விதிமுறையை ஏற்றுக்கொண்ட ஐசிசி இனி பேட்ஸ்மேன்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு இருக்கு?

Published

on

கிரிக்கெட் ஆட்டத்தின்போது ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆனால் உடனே அம்பியர் அவுட் கொடுத்துவிடுவார் அது நோ பாலா என்பதை சரி பார்ப்பதில்லை.

பல நேரங்களில் அது சரியான பந்தாகவே இருந்தாலும் வெகு சில நேரங்களில் அது நோ பாலாக வாய்ப்புள்ளது , போல்ட் அல்லது கேட்ச் ஆகும் சமயத்தில் உடனே அம்பயர் அவுட் கொடுத்து விடுவார்.

ஆனால் இப்படி செய்வதற்கு பதிலாக அவுட் ஆனாலே நோ பால் செக் செய்துவிட்டு தான் அவுட் கொடுக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ , ஐசிசி யிடம் கோரிக்கை விடுத்தது.

Loading...

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஐசிசி இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இந்த புது விதிமுறையை அமல்படுத்தி அனைத்து விக்கெட்டிற்கும் நோ பால் செக் செய்துவிட்டு அவுட் கொடுக்குமாறும்,

அதில் உள்ள நிறை குறை அதற்காகும் நேரம் உள்ளிட்டவற்றையும் கணக்கிட்டு தருமாறும் அதன்படி இந்த விதிமுறைக்கு ஏற்ப நேரத்தை திருத்தி சர்வதேச போட்டிகளில் கொண்டுவரலாம் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

உலகக்கோப்பை போட்டியில் நடுவர்கள் செய்த சிறு தவறு போட்டியின் முடிவையே மாற்றிவிட்ட நேரத்தில் இதுபோன்ற விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com