Connect with us

அரசியல்

இனி இந்தியாவை விமர்சிக்க முடியாது ! திருமாவளவன், வைகோ, சீமானிற்கு ஆப்பு ரெடி !

இனி இந்தியாவை விமர்சிக்க முடியாது !திருமாவளவன், வைகோ, சீமானிற்கு ஒரு நிமிடத்தில் ஆப்பு !

டெல்லி.,

வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் உள்ள சட்டங்களை இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது, குறிப்பாக நமது அண்டை நாடுகளான, சீனா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் எந்த அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும் நாட்டினை விமர்சிக்க முடியாது, அது தேசகுற்றமாக கருதும் அளவிற்கு சட்டங்களை பல உலக நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன.

Loading...

ஆனால் 130 மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், பலர் வெளிநாட்டு பிரிவினைவாத அமைப்புகளிடம் நிதியை பெற்றுக்கொண்டு இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் விதமாக பேசிவருவதாக உளவு துறை மத்திய அரசிற்கு அறிக்கை கொடுத்துள்ளது.

Loading...

உலக நாடுகள் பலவற்றிலும் ஒரே மொழி. மதம் கொண்ட நாடுகளாக உள்ளன ஆனால் அவையே தத்தமது நாடு குறித்து அநாகரிகமாக விமர்சித்தால் கடும் தண்டனை அளிக்கின்றனர், ஆனால் இந்தியாவில் பல்வேறு மொழி, இனம், மதம்களை பின்பற்றும் மனிதர்கள் வாழ்வதால் கட்டாயம் இந்தியாவை விமர்சனம் செய்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும், அப்போதுதான் பிரிவினைவாத கருத்துக்கள் பேசுவது ஒழிக்கப்படும் நாட்டு மக்கள் இடையே அமைதி நிலவும் என்றும் பலர் வலியுறுத்தி வந்தனர்.

மேலும் இந்தியாவை பொருக்கி தேசம் என்று இதே திருமுருகன் காந்தி சீனாவிலோ அல்லது சவுதியிலோ அந்த நாடுகளை விமர்சித்திருந்தால் இந்நேரம் அவரது தலை பூமியில் அரசாங்கமே வீழ்த்தியிருக்கும், அந்த அளவிற்கு சட்டங்களை கடுமையாக பல நாடுகள் வைத்துள்ளன, இதனால் புதிது புதிதாக பிரிவினைவாத தலைவர்கள் உருவாவது தடுக்கப்பட்டு மக்கள் பிரிவினைவாத எண்ணங்கள் இன்றி அமைதியாக வாழ வழிவகை ஏற்படுவதாக பல சமூக ஆய்வாளர்கள் கருத்துக்களை மத்திய அரசிற்கு தெரிவித்து வந்தனர்.

அதன் அடிப்படையில் மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர இருக்கிறது.

அதில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் காஷ்மீர் அரசியல்வாதிகள் முதல் தமிழகத்தை சேர்ந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்னும் பல தலைவர்கள் ஆகியோருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

1)இந்தியாவின் ஒருமை பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்தியாவிற்கு எதிராக கருத்து சொல்பவர்கள் இனி தேர்தலில் போட்டியிட முடியாது

2) குற்றம் சாட்டப்பட்டவர் மீதான விசாரணை 6 மாதத்திற்குள் விரைந்து விசாரணை செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் இதெற்காக நாடுமுழுவதும் மாநில தலைநகர்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

3) தொடர்ந்து பிரிவினைவாத செயல்களில் ஈடுபடுவோரின் குடியுரிமையை ரத்து செய்ய குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

4) குற்றம் நிரூபிக்கப்பட்டவரின் சொத்துக்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும்.

இவ்வாறு தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன, நிச்சயம் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இனி இந்தியாவை தரக்குறைவாக விமர்சனம் செய்வதோ, சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதோ இருக்காது என்று நம்ப படுகிறது.

உடனடியாக இந்த சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்று அனுபம்கெர் உள்ளிட்ட பலர் இப்போதே மத்திய அரசை வலியுறுத்துவருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Trending