Connect with us

Uncategorized

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மீன் இனத்தை பெருக்க புதிய ஐடியா….

தமிழக கடலோர பகுதிகளில் மீன் இனத்தை பெருக்க தமிழக அரசு முயற்ச்சி செய்து வருகிறது. சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில், மீன் இனத்தை அதிகரிக்கவும், பாதுகாக்கவும், செயற்கை மீன் உறைவிடங்கள், செயற்கை பாறைகளை கொண்டு அமைக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இதற்காக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மூன்று மாவட்டங்களில் 30 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டு எண்ணூர் துறைமுகம் அருகே ஏற்பட்ட எண்ணெய் கப்பல் விபத்தில் கடலில் எண்ணெய் கசிந்தது, இதனால் எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட தொகையை வைத்து மீன் வளங்களை பாதுகாக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்ம தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ரெட்டை பின்னல் வலை பயன்படுத்தப்படுவதை இதன் மூலம் தடுக்க முடியும் என்று அரசு திட்டமிட்டது அதன்படி, இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ள இருப்பதாக மீன்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending