Connect with us

#24 Exclusive

BREAKING பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு உங்கள் செல்போனில் இனி துல்லியமாக கண்டுபிடிக்கலாம் !

Published

on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இந்தியாவிற்கு என்று மிகவும் பிரத்தியேகமாக NAVIC என்ற புவி இருப்பிடத்தை துல்லியமாக கண்டறியும் முறையை அறிமுக படுத்தியது. அதில் குறிப்பாக நம்முடைய பயன்பாட்டில் உள்ள அனைத்து செல்போன்களிலும் அமெரிக்காவின் கண்டுபிடிப்பான GPS முறையே பயன்படுத்துகிறோம்.

இதற்கு மாற்றாகத்தான் இந்தியா தனது NAVIC வசதியை செயல்படுத்தியது இவை Gps முறையைவிட இந்தியாவின் இருப்பிடங்களை மிகவும் துல்லியமாக கண்டறிவதுடன், இந்தியாவில் பயனர்களின் விவரங்களை பாதுகாக்க உதவுகிறது, அதிலும் குறிப்பாக நமது நாட்டில் இருந்து GPS முறைக்காக மட்டும் பல கோடிகளை செல்போன் நிறுவனங்கள், கால் டாக்ஸி நிறுவனங்கள் உள்ளிட்ட இன்னும் பல நிறுவனங்கள் செலுத்தி வந்தன.

அதனை படிப்படியாக குறைத்து இந்தியாவில் முழுமையாக NAVIC பயன்பாட்டினை கொண்டுவரவே இஸ்ரோ இந்த திட்டத்தை செயல்படுத்தியது, இதன் மூலம் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதுடன், வருமானமும் கிடைக்கும் முதலில் தற்போது உலக அளவில் முன்னணியில் உள்ள ஜிப் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Loading...

அதன் அடிப்படையில் அமெரிக்காவின் சாண்டிகோவைச் சேர்ந்த குவால்காம் மொபைல் சிப் தயாரிப்பு நிறுவனம் இந்தப் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சிப்களை இனி வெளியிட உள்ளது.
அதன் மூலம், இந்தியாவில் புதிதாக அறிமுகமாகும் ஸ்மார்ட் செல்லிடப்
பேசிகளில், இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் 7 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள்களின் வழிகாட்டுதல் வசதி, புவி இருப்பிட வசதி இருக்குமிடத்தை அறியும்வசதி. உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருக்கும்.

Loading...

அத்துடன், அமெரிக்காவின் ஜிபிஎஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ, ரஷியாவின் குளோநாஸ், சீனாவின் பிடவ் உள்ளிட்ட செயற்கைக்கோள்களின் வழிகாட்டுதல் வசதிகளும் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, இஸ்ரோ வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், குவால்காம் நிறுவனம் இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யும் செல்லிடப்பேசிகளில், இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்களின் வசதிகளைப் பெறும் வகையிலான தொழில்நுட்பங்களும் இடம்பெற்றிருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் படிப்படியாக இந்தியாவின் NAVIC பயன்பாட்டினை அதிகரிக்கவும், இந்தியாவில் உற்பத்தியாகும் செல்போன் சாதனங்கள் கண்டிப்பாக NAVIC திறன் பெற்றிருக்க வேண்டும் என விதிமுறையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, இதுநாள் வரை பரிசீலனையில் இருந்த திட்டம் தற்போது அதிகார பூர்வமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது, இனி இந்தியா தனது தொழிநுட்பத்தை முழுமையாக பயன்படுத்தும் என்றும்..,

2025 ஆண்டிற்குள் முழுமையாக இந்தியா தனது சொந்த கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது, இனி இந்தியாவில் NAVIC மூலம் நீங்கள் தேடும் இடங்களை கண்டிப்பாக துல்லியமாக கண்டுபிடிக்கலாம். மத்திய அரசின் டிஜிட்டல் கனவு நினைவாகி வருகிறதா?

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending