Connect with us

#24 Exclusive

இனி டெஸ்ட் போட்டி 5 நாள் இல்லை ! டெஸ்ட் போட்டியில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரும் ஐசிசி !

கிரிக்கெட் உருவான காலத்தில் அது டெஸ்ட் போட்டியாகவே இருந்தது 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை யாரும் அமர்ந்து முழுமையாக பார்க்கமாட்டார்கள் . ஆட்டமும் மெதுவாக இருக்கும் . இப்போது டி20 போட்டிகள் வந்தபின்பு 50-50 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டியே பெரிய ஆட்டமாக தெரிகிறது .

இதனால் டெஸ்ட் போட்டிகளில் மக்களுக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை . அதனால் இப்போது ஐசிசி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது அதன்படி டெஸ்ட் போட்டியின் காலத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது . 5 நாட்கள் ஆடும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாகவோ அல்லது 3 நாட்களாகவோ குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

அப்படி செய்தால் , சில நாட்கள் மீதமாகும் அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை நடத்தலாம் அல்லது 4 டெஸ்ட் போட்டி நடைபெறும் நேரத்தில் 5 போட்டிகளை நடத்தலாம் . மேலும் டெஸ்ட் போட்டி 4 நாட்களாக குறைக்கப்பட்டால் ஒருநாளைக்கு 90 ஓவர்கள் என்ற விதியை மாற்றி 98 ஓவர்கள் புது விதி உருவாகும் மேலும் சில புதிய விதிகள் வரவும் வாய்ப்புள்ளது .

Loading...

உதாரணமாக 2015 முதல் 2023 வரை நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ஒருநாளை குறைத்தால் 335 நாட்கள் மீதமாகும் அதில் பல ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளை நடத்தலாம் . மேலும் இந்த புதிய மாற்றம் இப்போது நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடித்த பிறகே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending