Connect with us

அரசியல்

டெல்லியில் 53-ல் முந்தும் ஆம் ஆத்மீ ஆனால் கெஜ்ரிவால் நிலைமை மோசம் வெற்றியடைவரா? கடும் இழுபறி !!!

Published

on

டெல்லி மாநிலத்தின் 70 உறுப்பினர் சட்டசபைக்கு கடந்த 8-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (11.02.2020) எண்ணப்பட்டு வருகின்றன, இதற்காக மாநிலத்தில் 21 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக 33 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

டெல்லி சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை குறைவு என்பதாலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்பட்டதாலும் தேர்தல் முடிவுகள் அனைத்தும் பிற்பகலுக்குள் வெளியாகும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தேர்தலில் போட்டியிட்ட 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று மாலை தெரியவரும்.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் தற்போதைய முன்னணி நிலவரங்கள் அதையே குறிப்பிட்டு வருகின்றன, தபால் வாக்குகள் மற்றும் முதற்கட்ட சுற்று முடிவில் ஆம் ஆத்மீ 53 தொகுதிகளிலும் பாஜக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் 01 தொகுதிகளிலும் முன்னிலையில் வகிக்கின்றன.

Loading...

ஆம் ஆத்மீக்கு முதற்கட்ட முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும் அதே நேரத்தில் கெஜ்ரிவால் தனது தொகுதியில் 120 வாக்குகள் மட்டுமே தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரை காட்டிலும் முன்னிலை வகித்து வருகிறார், இந்த முறை கெஜ்ரிவால் தொகுதியில் வாக்கு பதிவு குறைவாக பதிவானதும் கடைசி கட்ட வாக்கு பதிவு பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் என்று பேசப்படும் நிலையில் கரைசேருவரா என்ற எதிர்ப்பார்ப்பும் காணப்படுகிறது.

Loading...

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending