புதிய கிரிக்கெட் விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி ! இது அன்றே இருந்திருந்தால் நியூசிலாந்து தான் உலக சாம்பியன் !

கிரிக்கெட் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது . சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட T20 போட்டி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற போட்டியாக மாறியுள்ளது . இந்நிலையில் ஒரு போட்டி சமனில் முடிந்தால் நடத்தப்படும் சூப்பர் ஓவரில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது ஐசிசி .

Loading...

கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது அதுவும் டை ஆனதால் அதிக பவுண்டரிகள் அடித்ததின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது இது பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில் சூப்பர் ஓவருக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது ஐசிசி .

அந்த விதிமுறைகள்

Loading...

1.ஒரு போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்படும் . அந்த சூப்பர் ஓவரும் டை ஆனால் தொடர்ச்சியாக முடிவு வரும் வரை சூப்பர் ஓவர் நடத்தப்படும் . அணைத்து சூப்பர் ஓவரிலும் 6 பந்துகள் வீசப்படும் .

2.இனி சூப்பர் ஓவரில் ஒரு அணிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் . ஒரு அணி சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தால் அந்த அணி ஆள் அவுட் ஆனதாக கருதப்படும் .

3.சூப்பர் ஓவரில் விளையாடும் இரண்டு அணிக்கும் தலா ஒரு ரீவ்யூ வாய்ப்பு வழங்கப்படும் . மலை உள்ளிட்ட காரணத்தால் சூப்பர் ஓவர் நீண்ட நேரம் தடைபட்டால் போட்டி கைவிடப்படும் .

4.போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி தான் சூப்பர் ஓவரில் முதல் பேட்டிங் செய்யவேண்டும் . சூப்பர் ஓவரில் முதலில் பந்துவீசும் அணி பந்தை தேர்வு செய்யலாம் இரண்டாவதாக பந்து வீசும் அணி அதே பந்தை பயன்படுத்தலாம் இல்லை என்றால் சூழலை பொறுத்து பந்தை மாற்றி கொள்ளலாம் .

5.போட்டியின் கடைசி ஓவரில் இருந்தது போலவே தான் பீல்டிங் இருக்கவேண்டும் சூப்பர் ஓவருக்கான இடைவேளை வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே

சற்றுமுன் இந்த அறிவிப்பு வெளியான நிலையில் இந்த விதிமுறைகள் அன்றே இருந்திருந்தால் நியூசிலாந்து அணி கோப்பையை வென்றிருக்கும் என்று நியூசிலாந்து ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*