தமிழக பாஜக தலைவராக யார் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்ன சொல்கிறது டெல்லி தலைமை?

தமிழக பாஜக தலைவராக  யார் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்ன சொல்கிறது டெல்லி தலைமை?

தமிழக பாஜக தலைவராக யார் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்ன சொல்கிறது டெல்லி தலைமை?

சென்னை.,

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார், எனவே பாஜகவின் தலைவர் பதவி, அடிப்படை உறுப்பினர் ஆகியவற்றில் இருந்து தமிழிசை விலகியுள்ளார், தற்போது தமிழிசை வகித்துவந்த பாஜக தலைவர் பொறுப்பு காலியாக இருப்பதால் அடுத்த தலைவர் பதவிக்கு யார் வருவார் என்ற எதிர் பார்ப்பு பாஜகவினர் இடையே எழுந்துள்ளது.

Loading...

இந்நிலையில் தமிழக பாஜக பதவிக்கு முன்னாள் பாஜக தலைவர்களாக பொறுப்பு வகித்த பொன். ராதா கிருஷ்ணன், சி பி. ராதாகிருஷ்னண் மற்றும் H ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் மேலும் நயினார் நாகேந்திரன், பேராசிரியர் ஸ்ரீனிவாசன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் போட்டியில் இருக்கின்றனர்.

Loading...

இவர்களில் யார் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக டெல்லியில் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் பேச்சு நடத்தினோம், அவர்கள் கூறிய கருத்துக்கள் என்னவென்றால்,

பாஜக தலைவர் பொறுப்பில் கடந்த மூன்று முறையாக நாடார் சமூகத்தை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர்தான் பதவி வகித்து வருகின்றனர் எனவே மீண்டும் நாடார் சமூகத்தை சேர்ந்தவருக்கு தலைவர் பதவி கொடுக்க வாய்ப்புகள் இல்லை, மேலும் முன்னர் பாஜக தலைவர்களாக பதவிவகித்த தலைவர்கள் மீண்டும் பொறுப்பிற்கு வருவதை அமிட்ஷா விரும்பவில்லை, இதுவரை தலைவர் பொறுப்பு வகிக்காத ஒருவரை தேர்வு செய்யலாம் என்று மேலிடம் கருதுவதாக தெரிவித்தனர்.

மேலும் தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்யலாம் என்று பாஜக தலைமை விரும்புகிறது தென் மாவட்டத்தை பொறுத்தவரை H ராஜா, ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் உள்ளனர், H ராஜா பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை தேர்வு செய்தால் தமிழக அரசியலுக்கு சரியாகுமா? என்ற சிந்தனையிலும் தலைமை உள்ளது.

பேரா. ஸ்ரீனிவாசனை பொறுத்தவரை பழகுவதற்கு எளிமையாக உள்ளார் என்ற பேச்சு அடிபடுகிறது எனினும் கட்சியில் கடந்த 2016- ஆம் ஆண்டுதான் சேர்ந்து பணியாற்றிவருகிறார் என்பதால் அதுவே அவருக்கும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மொத்தத்தில் மீண்டும் பெண் தலைவரை தேர்ந்தெடுப்பதா அல்லது நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் ஆகிய இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாமா? என்று தனக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் அமிட்ஷா ஆலோசனை கேட்டிருக்கிறார், அதன் அடிப்படையில் இரண்டு நாட்களுக்குள் பாஜகவிற்கு புதிய தலைவர் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் திமுக போன்று இருந்தால் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வருவார் என்று எளிதாக சொல்லிவிடலாம் பாஜக என்பதால் யார் வருவார் என்றே கணிக்கமுடியவில்லை என்று அரசியல் நோக்கர்களே வெளிப்படையாக சொல்லிவருகின்றனர்.

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *