Connect with us

அரசியல்

இனி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த அரசு அலுவலகம் போக வேண்டாம் இந்த ஆப் மட்டும் போதும் !

சென்னை:-

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

Loading...

வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் என்ற புதிய செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும். இதன் மூலம் ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் உள்ள தனது பெயர், பிறந்த நாள், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விபரங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால் அவரவரே அந்தத் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இந்த வசதி என்.வி.எஸ்.பி. என்ற இணையதளத்தில் உள்ளது.

Loading...

இதற்கான செயலி செப்டம்பர் 1-ந்தேதி முதல் செயல்படத் தொடங்கும். இதில் வாக்காளர் எண்ணை கொடுக்க வேண்டும். எந்த விபரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமோ அதற்கான தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட், வாகன ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, நிரந்தர கணக்கு எண் , உள்ளாட்சி அமைப்புகள் அளிக்கும் பிறப்புச் சான்றுகள், பள்ளியில் இருந்து பெறப்பட்ட மாற்றுச் சான்று,

10-ம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு ஆகியவற்றை முடித்து அதனுடய மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி இருந்தால்அதன் நகல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்த விவரத்தின் நகல்,சமீபத்திய தண்ணீர் கட்டண ரசீது அல்லது தொலைபேசி ரசீது, மின்கட்டண ரசீது, எரிவாயுஇணைப்பு ரசீது , விண்ணப்பதாரரின் பெயர், முகவரியிட்ட தபால் உறை ஆகியவற்றில் எதாவது ஒன்றை பதிவேற்றம் செய்யவேண்டும். பின்னர் இதனை அலுவலர்கள் வீட்டிற்கு வந்து சரிபார்ப்பார்கள்.தகவல் சரி என உறுதி செய்யப்பட்டால் நீங்கள் குறிப்பிட்ட திருந்தங்களை செய்வார்கள்.

கம்ப்யூட்டர் போன்ற வசதி இல்லாதவர்கள், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் ஆகியோர் இ-சேவை மையங்களுக்குச் சென்று சரிபார்க்கலாம். ஒரு பதிவுக்கு ரூ.1 மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. என்ற அளவில் ரூ.1.18 செலுத்தினால் போதும். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது. சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் அக்டோபர் 15-ம் தேதி முதல்தொடங்கும். அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அன்று வெளியிடப்படும். இந்தப் பணிகள் நவம்பர் 30-ந்தேதி வரை நீடிக்கும். இதற்காக நவம்பர் 2, 3, 9 மற்றும் 10-ந்தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமைகள்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

தொடர்ந்து ஜனவரி 1 முதல் 15-ந் தேதிக்கு இடையில் ஒரு நாளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிய திட்டம் பற்றி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் கேட்டனர். வாக்காளர்கள் பெயர் நீக்கம் குறித்த விபரங்களை கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் கேட்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு முகவரை நியமிக்க அரசியல் கட்சிகளை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்.

இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

Loading...

Trending