Connect with us

சமுகவலைத்தளம்

5 ரூபாயில் நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் – இந்தியர்களைக் கவர புதிய சலுகை!

இந்தியர்களுக்காக நெட்பிளிக்ஸ் தனது புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஒடிடி பிளாட்பார்ம் என்று சொல்லப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள்தான் சினிமாவின் எதிர்காலம் எனக் கணிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் ஏற்கனவே தங்கள் சந்தையை நிலைப்படுத்திக் கொண்டுள்ள நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்றி வருகின்றன.

Loading...

இதில் அமேசான் ப்ரைம் அளவுக்கு இந்தியாவில் நெட்பிளிக்ஸால் சந்தையை பிடிக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. காரணம் நெட்பிளிக்ஸின் சேவைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு ஆள் பார்க்கும் நெட்பிளிக்ஸின் கணக்கு ஒன்றின் குறைந்த பட்ச மாதக் கட்டணமே 199 ரூபாய்.

Loading...

இந்நிலையில் இந்தியர்களைக் கவர நெட்பிளிக்ஸ் அதிரடியான விலைக்குறைப்பு சலுகைகயை வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் புதிதாக நெட்பிளிக்ஸ் கணக்கு தொடங்குபவர்கள் தங்கள் முதல் மாத கட்டணமாக 5 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என அறிவித்துள்ளது. இந்த சலுகை பழைய வாடிக்கையாளர்களுக்குக் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப் போல இந்தியர்களுக்கு மட்டும்தான் இந்த சலுகை எனவும் அறிவித்துள்ளது.

Loading...

Trending