இப்படி ஒரு அசிங்கம் தேவையா திடீர் கெஜ்ரிவால் ஆதரவாளர்களே !! கிண்டல் அடிக்கும் பானு கோம்ஸ்

டெல்லி தேர்தலில் பாஜகவை மீண்டும் வீழ்த்தியதற்காக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சியும், அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழந்த கம்யூனிஸ்ட்களும் தங்கள் படு தோல்வியை மறந்து கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தனர், திமுக தலைவரும் வாழ்த்து தெரிவித்து கெஜ்ரிவால் வெற்றி மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான வெற்றி என கூறியிருந்தார்.

Loading...

இந்நிலையில் கெஜ்ரிவால் பாஜகவுடன் இணக்கமாக செல்ல ஒவ்வொரு தலைவராக தேடி பார்ப்பது கெஜ்ரிக்கு வாழ்த்து தெரிவித்த எதிர்கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, இது குறித்து அரசியல் விமர்ச்சகர் பானு கோம்ஸ் கிண்டல் அடித்து விமர்ச்சித்துள்ளார், பின்வருமாறு :-

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை.. தேடிப் போய் சந்தித்து…மத்திய அரசோடு இணக்கமாக சென்று …டெல்லி நிர்வாகத்தை நடத்த விரும்புவதாக கூறி இருக்கிறார் கெஜ்ரி.

Loading...

பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் மோடியை அழைத்திருந்த நிலையில்..அவர் கலந்து கொள்ளவில்லை. இருந்த போதிலும்…வேறு முக்கிய பணிகளின் காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம் என்று அவருக்கு அவரே சமாதானமும் கூறிக் கொண்டார் கெஜ்ரி.

கெஜ்ரி ஒரு முழுமையான அரசியல் வியாபாரி & முழுமையான சுயநலவாதி என்பதை முழுமையாக தெரிந்து வைத்திருப்பது பிஜேபி தான். சாமர்த்தியமான அரசியல்வாதிகளான பிரதமரும், உள்துறை அமைச்சரும் நேரடியாக தலையிடாமலே.. கெஜ்ரியின் சந்தர்ப்பவாத அரசியல் தனத்தை வெளிச்சமிடுகிறார்கள் , இந்தியாவை துண்டு துண்டாக்குவோம் கோஷ்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்து வைத்திருக்கும் கெஜ்ரி அரசின் மீது கிடுக்கிப்பிடி ஆரம்பித்திருக்கிறது.

கெஜ்ரியின் வெற்றியை கொண்டாடிய காங்கிரசும், இடதுகளும்….முழித்துக் கொண்டிருக்கின்றன… 🙂
சந்தர்ப்பவாத அரசியல் என்பது அடங்கிப்போவது. சாமர்த்தியமான அரசியல் என்பது ஆதிக்கம் செலுத்துவது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2662 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*