தமிழக அரசியல்வாதிகளை போல மாரடைப்பு ஸ்டண்ட் செய்த நேபாள பிரதமரின் கேபிளை கட் செய்த மருத்துவமனை !!

நேபாள் நாட்டின் எந்த பிரதமரும் சந்திக்காத எதிர்ப்பை, சங்கடங்களை ஆளும் கட்சியின் தலைவரும் பிரதமருமான கே பி ஷர்மா ஒளி சந்தித்து வருகிறார், அதிலும்நேற்று மாரடைப்பு என மருத்துவமனையில் அட்மிட் ஆன அவர் 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து ஓட்டம்பிடித்த சம்பவம் ஆசிய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

Loading...

இந்தியாவிற்கும் நேபாள் நாட்டிற்கும் பண்பாடு, மதம், கலாச்சார ரீதியாக பல்வேறு ஒற்றுமைகள் உண்டு நேபாள் தனது வெளிநாட்டு தேவையில் 70% இந்தியாவை நம்பியே இருக்கிறது, இந்நிலையில் திடீர் என நேபாள் பிரதமர் சீன ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்து இந்தியாவிற்கு எதிராக நேபாள் நாட்டின் வரைபடத்தை திருத்தி வெளியிட்டு சர்ச்சையை உண்டாக்கினார்.

இதனையடுத்து இந்தியா தனது உளவு அமைப்பின்மூலம் நேபாள் நாட்டின் அரசியலை மாற்ற தீர்மானித்தது, ஆளும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இந்தியாவிற்கு எதிராக ஒளி செயல்படுவது ராஜாங்க ரீதியாக மரபை மீறிய செயல் என்றும் இதனால் நேபாள் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு என்றும் உடனடியாக கே பி ஒளி பதவி விலகவேண்டும் என வலியுறுத்தினர்.

Loading...

வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் கே பி ஒளிக்கு எதிராக அவரது கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர், தீர்மானத்தில் கே பி ஒளி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வேறு பிரதமரை கட்சி தேர்ந்தெடுக்கும் என்று நிறைவேற்றினர். இதுதான் கே பி ஒளிக்கு மிகுந்த சங்கடத்தை கொடுத்தது.

சீனா கே பி ஒளியிடம் இந்தியாவிற்கு எதிராக தங்களது நாட்டு வான் எல்லையை பயன்படுத்த அனுமதி கேட்டு மிரட்ட தொடங்கியது, மறுபுறம் இந்தியா கே பி ஒளியின் ஆட்சியை மாற்ற முயலும் சூழலில் வேறு வழியின்றி இதய வலி ஏற்படுவதாக கூறி மருத்துவ மனையில் சென்று ஓய்வு எடுக்க நினைத்தார்.

ஆனால் அங்குதான் அவருக்கு போதாத நேரம் அவர் சென்ற மருத்துவமனையில் மருத்துவர்களாக இருந்த பலர் இந்தியர்களாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வேறு வழியின்றி உடனடியாக வெளியேற தீர்மானித்திருக்கிறார், ஆனால் அதற்குள் அவரை பரிசோதனை செய்த மருத்துவமனை அவருக்கு எந்த பாதிப்பும் தற்போது தென்படவில்லை என அறிக்கை வெளியிட்டு..,

நாட்டு மக்களிடம் மாரடைப்பு ஸ்டண்ட் செய்து மக்களின் மனநிலையை தனக்கு சாதகமாக திருப்ப நினைத்த கே பி ஒளியின் நாடகத்தின் முக்கிய கேபிளை கட் செய்து அனுப்பிவிட்டது, இனி அவர் ஒன்று பதவி விலகவேண்டும் இல்லை என்றால் சீனாவிற்கு எதிராக மீண்டும் இந்தியா பக்கம் வரவேண்டும் இதுதவிர அவருக்கு வேறு வழியில்லை இதுதான் மோடியின் இந்தியாவின் ஆட்டமோ?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*