நேபாள பிரதமர் கே பி ஒளி சிக்கினார் ! சீனா பக்கம் சென்ற மர்மம் விலகியது

இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனை மிக பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இந்தியா மற்றும் சீனாவை சுற்றியுள்ள அண்டை நாடுகள் யார் பக்கம் நிற்க போகிறார்கள் என்ற மிக பெரிய சந்தேகம் இரண்டு நாடுகளுக்குமே உள்ளது.

Loading...

அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அண்டை நாடுகளின் வான் தளத்தை எந்த நாடு பயன்படுத்துகிறதோ அதற்கு வெற்றி வாய்ப்புகள் கூடுதலாக இருப்பதாக கூறப்படுகிறது, இந்நிலையில் சீனா தனது அண்டை நாடுகளான, தைவான், வியட்னாம், பூடான், ஜப்பான், மற்றும் ஆசான் கூட்டமைப்பு நாடுகளுடன் எல்லை பிரச்சனையில் மிக பெரிய எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தானை தவிர அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமுகமான போக்கை கொண்டுள்ளது, இந்நிலையில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக, பண்பாட்டு ரீதியாக இருந்த நேபாளம் சில நாட்களாக இந்தியாவிற்கு எதிரான நிலையை எடுத்ததுடன், சீனாவிற்கு ஆதரவான நிலையை எடுத்தது.

Loading...

இதனால் இந்தியா சீனா, பாகிஸ்தானை தொடர்ந்து, நேபாள் எல்லையை கவனிக்கும் செயலிலும் ஈடுபட வேண்டிய சூழல் உண்டானது, இந்நிலையில் நேபாள் பிரதமர் கே பி ஒளி திடீர் என சீனாவிற்கு ஆதரவாக திரும்பியதில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என பலரும் கேள்வி எழுப்பினர், கடந்த மாதம் வரை அவரது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியது குறித்து பாராட்டியதுடன், அதிக இடங்களில் பிரதமர் மோடியை புகழ்ந்து இருந்தார்.

இப்போது நேபாள் பிரதமர் கே பி ஒளி ஏன் சீனா ஆதரவு நிலை எடுத்தார் என அந்நாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் பகிரப்பட்டுள்ளன, அதில் நேபாள் பிரதமருக்கும் நேபாளுக்கான சீனா பெண் தூதர் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து இருப்பதாகவும், அது குறித்த அனைத்து தகவலும் சீனாவிற்கு சென்ற நிலையில் கே பி ஒளி அடக்கி வாசிப்பதாகவும் இதனால் அவர் இந்தியாவை எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் கே பி ஒளி பதவி விலகவேண்டும் என அவரது சொந்தக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, இதனால் விரைவில் நேபாளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது அதே நேரத்தில் நேற்றைய கூட்டத்தில் சொந்த கட்சியினரே கே பி ஒளியை சீன தூதரக அதிகாரியுடன் ஒப்பிட்டு பேசியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*