#BREAKING நேபாள நாட்டின் அரசியலில் அதிரடி மாற்றம் ! இந்தியாவின் ரா உளவு அமைப்பு அதிரடி !!

ஆசியா கண்டத்தில் இரண்டு பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் அதன் எல்லையில் உள்ள அண்டை நாடுகளை தங்களது வழிக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்து வருகின்றன.

Loading...

அந்த வகையில் தற்போது இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் நேபாள் இதுவரை இந்தியாவை சார்ந்தே அரசியல் செய்து வந்துள்ளது, ஆனால் தற்போது அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுவதால், சீனாவின் கைக்கு மெல்ல செல்ல ஆரம்பித்துள்ளது, இதனையடுத்துதான் நேபாள் பிரதமர், சீனா வைரஸை காட்டிலும் இந்திய வைரஸ் மிகவும் மோசமானது என கூறியதுடன், இந்தியாவின் சில பகுதிகளை நேபாள் நாட்டில் இணைத்து வரைபடம் வெளியிட்டுள்ளது.

இங்கு தான் நேபாள் நாட்டில் என்ன நடக்கிறது என்பது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது , நேபாள் நாட்டில் இது வரை திசைக்கு ஒரு பக்கமாக
அரசியல் செய்து வந்த இந்திய வம்சாவளியினர்களின் அரசியல் கட்சிகளான சமாஜ்வாடி பார்ட்டி மற்றும் ராஷ்டிரிய ஜனதா பார்ட்டி ஆப் நேபாள் என்று இரண்டு கட்சிகளையும் இணைய வைத்து ஜனதா சமாஜ்வாடி பார்ட்டி என்கிற புதிய கட்சியை கட்சியை உருவாக்கி இருக்கிறது இந்திய உளவு அமைப்பு ரா !

Loading...

இதன் மூலமாக நேபாள பாராளுமன்றத்தில் 34 உறுப்பினர்களை கொண்டு இந்தியாவின் வம்சாவளியினர்களின்
அரசியல் பிரதிநிதிகள் மூன்றாவது இடத்திற்கு வந்து விட்டார்கள். ஏற்கனவே நேபாள காங்கிரஸ் 67 உறு ப்பினர்களை கொண்டு இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது. அதனால்
நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளை உடைக்கும் வேலையை இந்தியா செய்து கொண்டு இருக்கிறது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் இருந்து அதனுடைய துணை சேர்மனாக இருக்கும் பாம் தேவ்கௌதமை அந்த கட்சியில் இருந்து வெளியேற வைத்து நேபாள காங்கிரஸ் மற்றும் இந்திய வம்சாவளியினர்களின் மாதேசி கட்சிகளின் துணையோடு அவரை பிரதமராக்கவும் இந்தியா முயன்று கொண்டு இருக்கிறது.

இந்த கோபத்தில் தான் நேபாள பிரதமர். இந்தியாவுக்கு எதிராக சீன வைரசை
விட இந்திய வைரஸ் தான் டேஞ்சரானது என்று ஒப்பாரி வைத்துக் கொண்டு இருக்கிறார். டோக்லாம் பிரச்சனையில் சீனாவோடு மல்லுக்கு நின்று ஜெயித்த இந்தியா வுக்கு இந்த நேபாளத்தின் எல்லை பிரச்சனை சாதாரண விஷயம்.

நேபாளத்தை எப்படி வழிக்கு கொண்டு
வர வேண்டும் என்று இந்திய பிரதமரை மோடிக்கு நன்றாகவே தெரியும். கடந்த 2016 ம் ஆண்டும் இப்படித்தான்
இந்தியாவின் வம்சாவளியினரின்
அரசியல் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தியது நேபாளம். பதிலுக்கு மாதேசிகளை இந்திய நேபாள எல்லையில் போராட வைத்து நேபாளத்தை பணிய வைத்தது
இந்தியா.

இப்பொழுது நேபாளம் மீண்டும் இந்தியா
வுடன் வம்புக்கு வந்து இருக்கிறது. இந்திய எல்லையில் உள்ள கலாபானி லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகிய இடங்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தே இந்தியாவுடன் தான் இருந்து இருக்கிறது இந்த நிலையில் அதன் வழியாக இந்தியா கைலாஷ்க்கு பாதை அமைத்த பிறகு எங்கள் இடத்தின் வழியாக இந்தியா பாதை அமைத்து இருக்கிறது என்று கூறு வது சீனாவின் தூண்டுதல் இன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

இன்னொரு விசயம் தெரியுமா?
இந்தியாவில் பீகார் மாநிலம் மோதிஹரிக்கும், நேபாளத்தின் அம்லேக்கஞ்சுக்கும் இடையே பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்வதற்கான குழாய்வழி பாதையை இந்திய அரசு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மூலமாக அமைத்துள்ளது .
தெற்கு ஆசியாவில், எல்லை தாண்டி போடப்பட்ட முதலாவது குழாய்வழி பாதை இதுவே ஆகும். இதை இந்தியா கட் செய் தாலே போதும் ஒட்டுமொத்த நேபாளத்தின் இயக்கமே நின்று விடும். இருந்தாலும் இந்தியா அதை செய்யாது.

ஆனால் நிச்சயமாக நேபாளத்தின் ஆட்சியை விரைவில் இந்தியா மாற்றிவிடும். நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளான மார்க் சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மற்றும் மாவோ யிஸ்ட் கட்சிகளிடையே சண்டையை உரு
வாக்கி விட்டோம். இவர்கள் விரைவில்
அடித்துக் கொண்டு ஆட்சியை இழப்பார்கள். முடிவில் இந்தியாவிற்கு சாதகமான ஆட்சி உருவாகும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் அண்டை நாடன இலங்கையில் ராஜபக்சே அரசு தொடர்ந்து சீனாவிற்கு ஆதரவான சூழல் பூகோள முடிவுகளை எடுத்தபோது திடீர் என ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்ற சிறிசேனா வெளியே வந்து, ராஜபக்க்ஷேவிற்கு எதிராக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியை உருவாக்கி கொடுத்தது இந்திய உளவு அமைப்பான ரா என்று பல குற்றசாட்டுகளை ராஜபக்சே கட்சியை சேர்ந்தவர்கள் கூறியது நினைவு இருக்கலாம்.

அதே பாணியில் தற்போது நேபாள் நாட்டில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அதற்கான அனைத்து வேலைகளும் முடிவு அடைந்துவிட்டதாகவும் ‘ரா’ அமைப்பு பிரதமர் மோடிக்கு தகவல் கொடுத்துள்ளது, இனி வரும் மாதம்களில் நேபாள் நாட்டில் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் அரங்கேறலாம்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*