உலகில் மீண்டும் உருவாகிறது இந்துக்களுக்கான நாடு பக்கவா திட்டம் போட்டு தூக்கிய மோடி கதறும் கம்யூனிஸ்ட்கள்

உலகில் மீண்டும் உருவாகிறது இந்துக்களுக்கான நாடு பக்கவா திட்டம் போட்டு தூக்கிய மோடி கதறும் கம்யூனிஸ்ட்கள்

உலகில் இந்துக்களுக்கு என்று இருந்த ஒரே நாடு நேபாளம், ஆனால் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தபிறகு சீனாவின் பேச்சை கேட்டு கொண்டு நேபாளத்தை மதச்சாற்பற்ற நாடக அறிவித்தனர், அதனை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்த நேபாளத்தை பெட்ரோலை கொண்டு இந்தியா மீண்டும் தனது ராஜ தந்திர கொள்கைகள் மூலம் தனது வழிக்கு கொண்டுவந்துள்ளது. அது எப்படி என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்
…………………………………………………
இந்தியாவில் பீகார் மாநிலம் மோதிஹரிக்கும், நேபாளத்தின் அம்லேக்கஞ்சுக்கும் இடையே பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செ ல்வதற்கான குழாய்வழி பாதையை இந்திய அரசு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மூலமாக அமைத்துள்ளது .

தெற்கு ஆசியாவில், எல்லை தாண்டி போடப்பட்ட முதலாவது குழாய்வழி பாதை இதுவே ஆகும். இதன் வழியே பெட்ரோல், டீசல் நேபாளத்துக்கு கொண்டு செல்லப்படும்.நேற்று இந்த பாதையை நேபாள மக்களுக்கு மோடி அர்ப்பணித்ததை நேபாள அரசு வணங்கிவரவேற்றது.இதனால் நேபாளத்தில் நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக நேபாள அரசு
அறிவித்துள்ளது.

Loading...

அண்டையில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெறும் அரசியல் மாற்றங்களை மிகத் துல்லியமாக கணித்து அதற்கு உடனே எதிர் வினை செய்பவரே ஒரு சிறந்த ஆட்சியாளராக இருக்க முடியும்.

Loading...

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை சீனா தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இந்தியாவுக்கு பயம் காட்டி வந்தது.மன்மோகன் சிங் வழக்கம் போல சீனாவுக்கும் சீனாவின் பிடியில் சிக்கிய இந் திய நட்பு நாடுகளுக்கும் வருத்தம் தெரிவித்தே வண்டியை ஓட்டி வந்தார்.

இந்தியாவின் மிக நீண்ட கால நட்பு நாடான
நேபாளத்தை சீனா தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அங்கு இந்தியாவின் எதிரிகளான மாவோயிஸ்ட்களின் ஆட்சி வந்து
நேபாளம் இந்திய எதிர்ப்பு நிலைக்கு சென்ற
பிறகே மோடி இந்தியாவின் பிரதமராக வந்தார்.

மோடி பிரதமராக வந்த அடுத்த வருடம் நேபாளத்தின அரசியல் அமைப்பு சட்டம் மாற்றபட்டு உலகின் ஓரே இந்து நாடு என்கிற பெருமையை மாற்றி மதசார்பற்ற நாடு என்கிற முக மூடியை நேபாளத்திற்கு அணிவித்தார்கள் கம்யூனிச மற்றும் மாவோயிச ஆட்சியாளர்கள்.

அது மட்டுமல்லாது நேபாளத்தில் வாழும் இந்திய வம்சாவளியினர்களான மாதேசிகள்
அதிகமாக இருக்கும் பாராளுமன்ற தொகுதிகளை துண்டு துண்டாக பிரித்து அவர்களை அரசியல் ரீதியாக பலம் இழக்க செய்யும் வகையில் நேபாளிகள் அதிகளவில் இருக்கும் தொகுதிகளோடு இணைக்கப்பட்டன.

இதனால் நேபாளத்தில் நேபாளிகளுக்கு அடுத்து 2 வது இடத்தில் இருக்கும் மாதேசிகளின் அரசியலை முடிவுக்கு கொண்டு வந்தார்கள் கம்யூனிச மாவோயிச அரசியல்வாதிகள்.நேபாளம் இந்து நாடு என்கிற பெருமையை கம்யூனிச மாவோயிச அரசியல்வாதிகள் சிதைத்த பொழுது அமைதியாக இருந்த மோடி இந்திய வம்சாவளியினரின் அரசியல்
அங்கீகாரத்தை சிதைத்த பொழுது பொங்கிவிட்டார்.

இந்திய அரசு மாதேசி தலைவர்களை அழைத்து பேசியது. மறுநாளே இந்திய நேபாள எல்லையை அடைத்து மாதேசிகள் போராடத்தை ஆரம்பித்தார்கள்.இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு செல்ல வேண்டிய அனைத்து பொருட்களும் மாதேசிகளின் போராட்டத்தினால் நேபாளத்திற்கு செல்லாமல் இந்திய
எல்லையில் முடங்கியது.

சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு வரிசையாக லாரிகள் நின்றன. நேபாளத்தில் பெட்ரோல் டீசல் கிடைக்கவில்லை .இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வரவில்லை.இதற்கு இந்தியா விதித்துள்ள பொருளாதார தடையே காரணம் என்று நேபாளம் உலகிற்கு அறிவித்தது.

பெட்ரோல் இல்லாமல் வேலைக்கு போக முடியாமல் நேபாளிகள் வீட்டில் முடங்கினார்கள். டீசல் இல்லாது நேபாளத்தில் போக்குவரத்து முடங்கியது.2015 ஏப்ரலில் நடைபெற்ற பூகம்பத்தையே எதிர் கொண்டு மீண்ட நேபாளிகள்
இந்தியாவின் பொருளாதார தடையை எதிர்
கொள்ள முடியாமல் பயந்து போய் வீதிகளில்
வந்து இந்தியாவுக்கு எதிராகவும் மோடியை
தூற்றியும் கோசம் போட ஆரம்பித்தார்கள்.

இந்தியா விதித்த பொருளாதார தடையினால் நேபாளத்தில் உள் நாட்டு கலவரம் பரவ
ஆரம்பித்தது .இதனால் பயந்து போன நேபாள அரசு சீனாவை பார்த்து காப்பாற்றுங்கள்
என்று கதறியது.சீனாவும் நேபாளத்திற்கு
உதவுவதாக அறிவித்தது.

உடனே இந்தியாவில் உள்ள சிலர்
அதன் ஊடகங்களும் நேபாள
இந்திய உறவை மோடி சிதைத்து விட்டார் என்று மோடியை திட்ட ஆரம்பித்தார்கள். அந்த கூட்டம் 2008 -ல் இருந்து நேபாளத்தில்
சீனாவின் கம்யூனிச மாவோயிச அரசியல்
ஓங்கி வந்ததை ஆர்ப்பரித்து ஆதரித்து வந்த
கூட்டம்.

மோடிக்கு எதிராக அந்த கூட்டம் தூண்டி விட்ட எதிர்ப்புகளை புன்முறுவலோடு
எதிர் கொண்டார் மோடி.சீனாவும் உதவி கேட்ட நேபாளத்திற்கு அள்ளி கொடுத்தது.ஆனால் எத்தனை நாட்கள் அளிக்க முடியும்,? சீனாவில்
இருந்து நேபாள தலைநகர் காத்மண்டுக்கு
பொருட்கள் தரை வழியாக வர வேண்டும் என்றால் குறைந்தது ஒரு வாரம் ஆகும்.

ஏனென்றால் சீனா நேபாளம் இடையே உள்ள
தொலைவு சுமார் 3200 கிலோ மீட்டருக்கும்
அதிகமான தொலைவு உள்ளது.இதனால் வான் வழியாக சில நாட்கள் பொருட்களை
அளித்து விட்டு கெடுதலை மட்டுமே எங்களால் உங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் நன்மைகளை அல்ல என்று ஒதுங்கி கொண்டது .

கடைசியில் நேபாளம் வேறு வழியின்றி இந்தியாவின் கால்களில் விழுந்து காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியது.மோடியும் குடும்பத்தில்
முரண்டு பிடித்து ஓடிய தம்பி தவறு உணர்ந்து
திருந்தி திரும்பி வரும் பொழுது எதிர் கொள்ளும் அண்ணனாக நேபாளத்தை தாங்கி அனைத்துக் கொண்டார்.

இந்த இடத்தில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.இந்தியாவின் உத்தர பிரதேசம் பீகார் மாநிலங்களில் இருந்து 1 அல்லது 2 மணி நேரத்திலேயே இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு பொருட்கள் சென்று விட முடியும். ஏனென்றால் உத்திரபிரதேசம் பீகார் மாநிலங்களில் இருந்து நேபாளம் அதிகபட்சமாக 150-100
கிலோ மீட்டர் தொலைவிலேயே இருக்கிறது.

இதனால் நேபாளம் தனி நாடாக இருந்தாலும் தன்னுடைய ஒவ்வொரு அசைவிற்கும் இந்தியாவை எதிர்பார்த்தே இருக்கிறது.இந்தியாவும் தன்னுடைய ஒரு மாநிலமாக நினைத்து
நேபாளத்திற்கு உதவி செய்து வந்தது. ஆனால் நேபாளத்தில் மன்னராட்சி அகன்று மாவோயிச கம்யூனிச அரசியலின் பிடியில் நேபாளஅரசு சிக்கிய பிறகு இந்திய எதிர்ப்பு உணர்வுகள் தொடர்ந்து தூண்டப்பட்டு வந்தது.

இதனால் தான் இந்திய வம்சாவளியினரான
மாதேசிகளை நேபாள அரசியலில் இருந்து
ஓரம் கட்ட கம்யூனிச அரசியல்வாதிகளால்
நேபாளத்தின் அரசியல் அமைப்பு சட்டம் உருக்கப்பட்டது.ஆனால் மோடி விதித்த பொருளாதார தடையினால் மண்டியிட்ட
நேபாள அரசு மீண்டும் இந்திய வம்சாவளியினர் அரசியல் அதிகாரம் பெறும் வகையில் நேபாள அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தார்கள்.

இதனால் மனம் மகிழ்ந்த மோடி இந்தியாவில்
இருந்து நேபாளத்திற்கு குழாய் வழியாக வே
பெட்ரோல் டீசல் அளிக்கும் வகையில் மோதி ஹரி-அம்லேஹஞ்ச் ப்ராஜெக்ட் டிற்கு 2017
ஆகஸ்ட் இறுதியில் தன்னுடைய நேபாள பயணத்தின் பொழுது அறிவித்தார்.

சுமார் 375 கோடி ரூபாய் செலவில் இந்தியா
அமைத்துள்ள இந்த குழாய் வழி பெட்ரோல்
பாதை தெற்கு ஆசியாவின் முதல் குழாய்வழி
பெட்ரோல் பாதையாகும்.இந்தியாவின் பீகார்
மாநிலத்தில் நேபாளத்தில் வாழும் இந்திய
வம்சாவளியினர்களான மாதேசிகளின்
பூர்வீக மண்ணான மோதிஹரியில் இருந்து
69 கிலோ மீட்டர் தொலைவிற்கு மண்ணுக்கடியில் குழாய்கள் பாதிக்கப்பட்டு அதன் வழியாக பெட்ரோல் டீசல் அனுப்பப்பட்டு நேபாளத்தில் உள்ள அம்லேகஞ்ச் என்கிற இடத்தில்உள்ள
ராட்சஷ தொட்டிகளில் நிரப்பப்படுகிறது.

பிறகு அங்கிருந்து நேபாளத்தில் உள்ள பெட்ரோல் டீசல் சப்ளையர்களுக்கு அனுப்பி
வைக்கப்படுகிறது.இதனால் இந்திய நேபாள
பாதையில் வாகன போக்குவரத்து சுலபமாகும்.அதோடு இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு பெட்ரோல் டீசல் கொண்டு செல்ல ஆகும் காலமும் எரிபொருளும் மிச்சமாகிறது.

இந்த பாதை வழியாக, ஆண்டுதோறும் 20 லட்சம் மெட்ரிக் டன் சுத்தமான பெட்ரோலிய எரி பொருள் நேபாளத்துக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இதனால் குறைந்தது 1 கோடி
ரூபாய் அளவிற்கு எரிபொருள்மிச்சமாகிறது் பிறகு லாரி வாடகை லேபர் கூலி என்று பார்த்
தால் நேபாளத்திற்கு வருடத்திற்கு 5 கோடி
ரூபாய் மிச்சமாகிறது.

இதனால் நேபாள அரசு நேற்று முதல் 2 பெட்ரோல் டீசல் விலையை 2 ரூபா ய் குறைத்து அறிவித்து ள்ளது. இதனால் இப்பொழுது
நேபாளத்தில் பெட்ரோல் விலை 97 ரூபாயில்
இருந்து 95 ரூபாயாக விற்கப்படும். இந்தியாவின் இந்த முயற்சியினால். மகிழ்ந்து நிற்கும்
நேபாளிகள் மோடிக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்கள்.

credit -திரு. விஜயகுமார் அருணகிரி
……………………..
மோடி நேபாள் நாட்டை பெட்ரோல் குழாய்கள் மூலம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது ஒன்றும் உதவுகிற எண்ணம் மட்டும் இல்லை வருகின்ற நேபாள் அரசின் தேர்தல் வாக்குறுதியில் நேபாள் நாட்டின் எதிர்க்கட்சி மீண்டும் நேபாள் நாட்டை இந்துக்களின் நாடக அறிவிப்போம் என்றும் அதனை இந்தியா உதவியுடன் செயல்படுத்துவோம் என்றும் திடமாக கூறியுள்ளது மேலும் நேபாள் உள்ளாட்சி தேர்தல்களிலும் அந்த கட்சியே 80% இடங்களை கைப்பற்றியுள்ளது, இதன்படி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றே கணக்கிடப்பட்டுள்ளது, இதன்மூலம் உலகில் இந்துக்களுக்கு என்று தனி அடையாளமாக திகழ்ந்த நேபாள் நாட்டை மீண்டும் மோடி மீட்டு எடுத்திருக்கிறார் சீனாவின் பிடியில் இருந்து மீட்டது மட்டுமல்லாமல் மதம்மாற்ற குழுக்களிடம் இருந்தும் !

விரைவில் மீண்டும் இந்துக்களுக்கான ஒரு நாடு உதயமாக இருக்கிறது !

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *