Connect with us

#24 Exclusive

நெல்லை கண்ணன் வீட்டில் பரபரப்பு ஆள விடுங்கடா சாமி கதறும் நெ கண்ணன் !!!

சமூகவலைத்தளம் :-

கடந்த டிசம்பர் மாதம் 29 தேதி நெல்லை கண்ணன், நெல்லை மாவட்டத்தில் SDPI எனும் கட்சியின் சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார், அவ்வுரையில் மிகவும் தரம்தாழ்ந்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஆகியோரை விமர்சனம் செய்திருந்தார் மேலும் மோடி சோலியை முடிக்க மாட்டேங்கிறீர்களே என்று கூடியிருந்த இஸ்லாமியர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

இது பாஜகவினர் இடையே மிக பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்பு அவர் தனியார் விடுதியில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார், இந்த சூழலில் நெல்லை கண்ணனுக்கு நேற்று மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது, அதனை தொடர்ந்து சிறையிலிருந்து கண்ணன் விடுதலை செய்யப்பட்டார்.

Loading...

இந்த நிலையில்தான் இன்று மிகவும் பரபரப்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் நெல்லை கண்ணன் வீட்டிற்கு தனித்தனி கார்களில் வலம் வந்து இறங்கினர், கூடவே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணுவும் வந்திருந்தார், அப்போதுதான் அந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியிருக்கிறது, அதாவது நீங்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எங்கள் அடையாளம் என்று பேசியிருக்கிறார்.

Loading...

அப்போது நெல்லை கண்ணன் வேல்முருகன் முகத்தை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு நிபந்தனை ஜாமீனில் இருக்கும்போது இது தேவையில்லை என்றும், அனைத்தும் பொறுமையாக பார்த்து கொள்ளலாம் என்று மட்டும் கூறிவிட்டு ஆள விடுங்கடா சாமி என்று கதறியிருக்கிறார் அதன் பிறகு வேல்முருகன் குழுவினர் கண்ணனுடன் புகைப்படம் எடுத்து கொண்டு என்ன உதவி வேண்டும் என்றாலும் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு விடைபெற்றனர்.

நெல்லை கண்ணன் நீதிமன்றத்தில் ஐயா நான் திரு மோடி, அமிட்ஷா இருவரையும் அரசியலில் இருந்து தோற்கடிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டுதான் சோலியை முடிங்க என்று கூறினேன் மற்றபடி கொலையை குறிப்பிடவில்லை என்வயதில் என்னால் சிறையில் இருக்க முடியாது நீங்கள்தான் கருணை காட்டவேண்டும் என்று கூறியே நிபந்தனை ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை கண்ணனை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க அணுகியபோது சொல்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து கொள்கிறாராம் போராளி கண்ணன்.

தலையில் தாக்கியது ஞாபகம் வந்திருக்குமோ?

Loading...

Trending