தோனியைத் திட்டியதற்காக வருத்தப்பட்டேன் – 15 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த வீரர்!

தோனியைத் திட்டியதற்காக வருத்தப்பட்டேன் – 15 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த வீரர்!

Loading...

2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் தன்னுடைய பந்தில் ஒரு கேட்ச்சை விட்டதற்காக தோனியைக் கடுமையாக திட்டியதை இந்திய பந்துவீச்சாளர் நெஹ்ரா இப்போது நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய அணி 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்கு நுழைந்ததில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ராவின் பங்களிப்பு அளப்பரியது. அப்போது முதல் இந்திய அணியில் முன்னணி பந்துவீச்சாளராக இருந்து வந்த நெஹ்ரா கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். தனது வேகப்பந்து வீச்சுக்காகவும் விக்கெட் எடுக்கும் திறமைக்காகவும் அறியப் பட்ட நெஹ்ரா அவரது ஆக்ரோஷத்துக்காகவும் மிகவும் அறியப்பட்டவர்.

Loading...

களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் நெஹ்ரா தன்னுடைய பந்தில் யாராவது கேட்ச்களை தவறவிட்டால் தனது கோபத்தைக் கடுமையாக வெளிப்படுத்தும் குணமுள்ளவர். அந்த வகையில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலரே பலமுறை களத்திலேயே நிறைய திட்டு வாங்கியுள்ளனர்.

இது போல ஒரு சம்பவத்தில் 2005 ஆம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் அப்ரிடியின் கேட்ச் ஒன்று கீப்பர் தோனிக்கும் டிராவிட்டுக்கும் இடையில் சென்றது. அப்போது அந்த கேட்சை தவறவிட்டதற்காக நெஹ்ரா தோனியைக்  கடுமையாக திட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் இப்போது வைரலானது. இதைப் பற்றி தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ள நெஹ்ரா ‘அந்த போட்டியில் அப்ரிடி என்னுடைய முதல் பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடிப்பார். ஆனால் அடுத்த பேட் நுனியில் பட்டு வந்த கேட்சை தோனி மிஸ் செய்துவிடுவார். அந்த கேட்ச்சை தோனி தவறவிட்டதால் நான் அவரிடம் மோசமாக நடந்துகொண்டேன். அந்த போட்டியில் நாங்கள் தோற்றோம். போட்டி முடிந்த பின்னர் என்னுடைய செயல் நியாயமானதுதான் என்று தோனி சொன்னாலும் நான் என் செயலை நினைத்து வருத்தமடைந்தேன்’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*