நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல காமெடி நடிகர்! ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

Loading...

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’தர்பார்’ படத்திலும், காதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகிவரும் ’நெற்றிக்கண்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கும் படமொன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Loading...

காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தை அவர் சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் கேரக்டரில் அதாவது மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாக ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார்

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை என்பதும், நயன்தாராவின் கேரக்டர் தான் இந்த படத்தின் கதையின் முக்கிய புள்ளியாக அமைந்துள்ளது என்றும், நயன்தாராவுக்கு இந்த படம் அவரது திரையுலக வாழ்வில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் கூறி வருகின்றனர்

நயன்தாரா நடித்த ஒரு சில படங்களில் காமெடி கேரக்டரில் நடித்த நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்போது அவர் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*