Connect with us

#24 Exclusive

காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா நயன்தாரா?

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் தனக்கு கதை பிடித்து விட்டால் ஹீரோ யார் என்பதை பற்றி கவலைப்பட மாட்டார், அது ரஜினி, விஜய் போன்ற மாஸ் நடிகர்களாக இருந்தாலும் சரி, அறிமுக நடிகர்களாக இருந்தாலும் சரி, அவர் உடனே நடிக்க சம்மதித்து விடுவார்

ஒரு திரைப்படத்தில் நடிக்கும் முன் நயன்தாரா பார்ப்பது இரண்டே இரண்டுதான். ஒன்று கோடிக்கணக்கில் சம்பளம் அடுத்தது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. இந்த இரண்டும் ஒத்து வந்தால் அவர் எந்த படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என்பதுதான் உண்மையாகும்

இந்த நிலையில் ’எல்கேஜி’ படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை எல்கேஜி படத்தை தயாரித்த அதே வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நயன்தாராவை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதற்கு நயன்தாரா கிட்டத்தட்ட சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும். கூறப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே நயன்தாரா நடித்த வேலைக்காரன் மற்றும் நானும் ரவுடிதான் படங்களில் காமெடி வேடங்களில் ஆர்ஜே பாலாஜி நடித்திருந்தாலும் இந்த படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றார்களோ இல்லையோ, முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர் என்பது உறுதி

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share